வெற்றி படத்தை இழந்த ஜீவா.. அதற்காக இயக்குனர் செய்த கைமாறு.!

நடிகர் ஜீவா தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் ஆவார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான ஆர்.பி சௌத்ரியின் மகன் தான் ஜீவா. தயாரிப்பாளரின் மகன் என்றாலும் கூட நடிகர் ஜீவா தொடர்ந்து தனது திறமையாலேயே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றார்.

ஜீவா பிரபலமாகும் வரை அவர் தயாரிப்பாளரின் மகன் என்பது பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. அந்த அளவிற்கு ஜீவா இந்த விஷயங்களை வெளிக்காட்டி கொள்ளாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் இயக்குனர் கே.வி ஆனந்த் திரைப்படத்தில் வாய்ப்பை இழந்ததை குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நான் கற்றது தமிழ் திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு கே.வி  ஆனந்த் என்னை அழைத்து எனக்கு திரைப்பட வாய்ப்பு கொடுப்பதாக கூறினார்.

actor jeeva

Social Media Bar

ஏனெனில் அப்போது எனக்கு கற்றது தமிழ் நன்றாக போகவில்லை. இந்த நிலையில்தான் கே.வி ஆனந்த் அயன் திரைப்படத்தின் கதையை எழுதி வைத்திருந்தார். ஆனால் அப்போதைய சமயத்தில் சில காரணங்களால் என்னால் அந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது.

எனவே அந்த படத்தில் சுர்யா நடித்தார். படமும் நல்ல வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து அடுத்து அவர் இயக்கிய கோ திரைப்படத்தில் வாய்ப்பை கொடுத்தார் என பகிர்ந்திருந்தார் ஜீவா. அதே போல அந்த படமும் நல்ல வெற்றியை ஜீவாவுக்கு பெற்று கொடுத்தது.