தமிழில் பிரபலமான காமெடி நடிகர்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராக இருந்து வருபவர் நடிகர் வடிவேலு. வடிவேலு நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் அவருடைய காமெடிக்காகவே பிரபலமாக இருந்துள்ளன. இன்னமும் சில வடிவேலு காமெடிகள் எந்த படத்தில் வரும் என்பதே பலருக்கும் தெரியாமல் இருக்கும்.
ஆனால் வடிவேலுவிற்கும் நடிகர் விஜயகாந்துக்கும் இடையே சண்டை ஏற்பட்ட பிறகு அது வடிவேலுவின் சினிமா வாழ்க்கையை வெகுவாக பாதித்தது. அதனை தொடர்ந்து அரசியலுக்கு சென்றார் வடிவேலு. பிறகு திரும்ப அவரால் சில வருடங்கள் சினிமாவில் நடிக்க முடியாமல் போனது.
என்னதான் இப்போது மீண்டும் வாய்ப்பை பெற்று நடித்து வந்தாலும் கூட பழைய வடிவேலுவாக அவர் இல்லை என்றுதான் கூற வேண்டும். இந்த நிலையில் விஜயகாந்த் தான் வடிவேலுவை வளர்த்துவிட்டவர், ஆனால் அவரது இறப்புக்கே வடிவேலு வரவில்லை என பலரும் வடிவேலுவை பேசி வந்தனர்.

இதுக்குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் சரத்குமார் பேசியிருந்தார். அதில் அவர் கூறும்போது வடிவேலுவுக்கும் விஜயகாந்துக்கும் ஒரு கார் பார்க்கிங்கில் வந்த சண்டைதான் எல்லாவற்றுக்கும் காரணம். எல்லா மனிதர்களுக்குமே நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா? என்கிற ஈகோ பிரச்சனை வரதான் செய்யும்.
அதற்கு பிறகு அரசியலுக்கு சென்ற வடிவேலு தொடர்ந்து விஜயகாந்தை பற்றி மோசமாக பேச வேண்டிய சூழல் உருவானது. இதனால்தான் அவர் அந்த இறப்பிற்கு வராமல் இருந்திருப்பார். ஒருவேளை விஜயகாந்தை பார்க்க வந்து ஏதாவது பிரச்சனை ஆகிவிட்டால் என்ன ஆகும் என்று யோசித்திருப்பார்.
ஆனால் வீட்டில் அழுதிருப்பார். இப்படி கடைசி நேரத்தில் கூட விஜயகாந்தை பார்க்க முடியாமல் போய்விட்டதே என வருத்தப்பட்டிருப்பார். அவரும் மனிதர்தானே என கூறியிருக்கிறார் சரத்குமார்.






