சன் டிவியின் ஒரு வருட வருமானம் எத்தனை கோடி தெரியுமா? இவ்வளவு இருக்கும்னு எதிர்பார்க்கலை..!

ஆரம்ப காலகட்டங்களில் தொலைக்காட்சி என்கிற ஒன்று வந்த போது மத்திய அரசுதான் தொலைக்காட்சி சேனல்களை நடத்தி வந்தன. டிடி பொதிகை சேனலில் ஓடும் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சிக்காக ஒரு கூட்டமே அப்பொழுது கூடி இருப்பதை பார்க்க முடியும்.

அந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனமாக அறிமுகமான நிறுவனம் தான் சன் டிவி. அப்பொழு துவங்கி இப்பொழுது வரை தமிழ்நாட்டில் மிக முக்கியமான ஒரு டிவி சேனலாக சன் டிவி இருந்து வருகிறது.

சன் நெட்வொர்க்கை பொறுத்தவரை தமிழில் சன் டிவி, கே டிவி, ஆதித்யா டிவி, சுட்டி டிவி, சன் மியூசிக், சன் நியூஸ் ஆகிய சேனல்களை சன் டிவி கைவசம் கொண்டுள்ளது.

Social Media Bar

அதே மாதிரி தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளிலும் சன் குடும்பத்திற்கு டிவி சேனல்கள் உண்டு. ஒவ்வொரு டிவி சேனல் மூலமாகவும் அதிக வருவாயை ஈட்டி வருகிறது சன் குழுமம். இது இல்லாமல் சன் பிக்சர்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடி நிறுவனத்தையும் கொண்டுள்ளது.

இந்த நிலையில் சன் டிவி என்கிற ஒரு டிவி சேனல் மூலம் மட்டுமே வருடத்திற்கு 3500 கோடி ரூபாய் சம்பாதிக்கிறதாம். ஆனால் ஊழியர்களின் சம்பளம் சேட்டிலைட் செலவுகள் மாதிரியான பல செலவுகளை நீக்கும்பொழுது லாபம் என்பது நிறுவனத்திற்கு குறைவானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.