தற்சமயம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பைசன் திரைப்படம் அதிகமாக பேசப்படும் படமாக மாறி இருக்கிறது. வருகிற அக்டோபர் 17 இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.
இந்த திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அனுபாமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு இப்பொழுது அதிக வரவேற்பு உருவாகியுள்ளதற்கு முக்கிய காரணம் படத்தின் ட்ரைலர் என்று கூறலாம்.
தென்னிந்தியாவின் முக்கிய விளையாட்டான கபடி போட்டி விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் கதைகளம் அமைந்துள்ளது. ஏற்கனவே கில்லி, வெண்ணிலா கபடி குழு மாதிரியான கபடி தொடர்பான படங்கள் வந்திருந்தாலும் கூட கபடி விளையாட்டுக்குள் இருக்கும் ஜாதிய அரசியலை பேசும் விதமாக பைசன் திரைப்படம் அமைந்திருக்கிறது.
பைசன் கதை அம்சம்:
பெரும்பாலும் மாரி செல்வராஜ் அவர் வாழ்ந்த பகுதிகளில் நடந்த சாதிய ஏற்ற தாழ்வுகளைதான் படமாக்கி வருகிறார். அந்த வகையில்தான் இந்த படமும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்கான ஒரு இடத்தை பிடிப்பதற்கு ஏதாவது ஒரு விஷயத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதே தொடர்ந்து பா ரஞ்சித் மாரி செல்வராஜ் மாதிரியான இயக்குனர்கள் முன்வைக்கும் கருத்தாக இருக்கிறது.
பைசன் திரைப்படமும் அப்படியான ஒரு கருத்தை நோக்கி தான் நகர்கிறது கபடியின் மூலமாக ஒரு பெரிய இடத்தை பிடிப்பதன் மூலம் தனது சமூகத்திற்கு ஒரு அங்கீகாரத்தை பெற முடியும் என்பது தான் கதாநாயகனின் நோக்கமாக இருக்கிறது.
அதற்கு நடுவே அவர் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து அந்த இடத்தை பிடிக்கிறார் என்பதாக படத்தின் கதை இருக்கும் என தெரிகிறது. இந்தப் படத்திற்கு இப்பொழுது அதனால் வரவேற்பு அதிகரித்து இருக்கிறது.