தெய்வீக விஷயங்களை அதிகமாக பயன்படுத்தியதன் மூலமாக அதிக வரவேற்பை பெற்ற ஒரு திரைப்படமாக காந்தாரா திரைப்படம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தெய்வங்கள் குறித்த தன்னுடைய அபிமானத்தை படத்தின் இயக்குனரான ரிஷப் ஷெட்டி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது மனிதர்கள் தோன்றிய காலத்தில் இருந்தே அவர்கள் வணங்கும் தெய்வங்களும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.
தெய்வம் குறித்து இயக்குனர்:
சட்டங்களும் நீதிபதிகளும் இப்பொழுதுதான் இருக்கிறார்கள். அதற்கு முன்பிருந்தே சட்டம் வகுத்தது தெய்வங்கள் மட்டும்தான். தெய்வம் வந்து ஒரு விஷயத்தை குறிப்பிட்டதென்றால் அதற்கு மாற்று கருத்தே கிடையாது.
அதைதான் நான் காந்தாராவின் கதை கருவாகவே வைத்திருந்தேன் நிறைய youtube வீடியோக்களிலும் நேரிலும் சென்று இந்த தெய்வங்களை குறித்து நான் பார்த்தேன்.
அதை வைத்துதான் சத்தமாக பேசும் ஒரு முறையை காந்தாரா படத்தில் வைத்தேன். ஓம் என்று கத்துவதாக இருக்கும் காட்சி கூட அது அவர்கள் கத்துவது கிடையாது. அந்த தெய்வங்கள் அப்படி தான் பேசுகின்றன என்பதை தான் நான் சொல்ல நினைத்தேன் என்று கூறியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி.
 
			 
			








