Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவர் ஆவார். தமிழ்நாடு மட்டுமின்றி உலக அளவிலேயே ரஜினிகாந்துக்கு என தனி புகழ் உண்டு. 70 வயதை கடந்த பிறகும் கூட தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் முன்பு தமிழ் சினிமாவில் நடித்து கொண்டிருந்தப்போது ஏ.வி.எம்ம்மில் அவரை வைத்து அதிக படங்களை இயக்கியவர் எஸ்.பி முத்துராமன். எஸ்.பி முத்துராமன் இயக்கிய திரைப்படங்கள் எல்லாமே பெரும்பாலும் வெற்றி படங்களாகதான் இருந்தன.

இந்த நிலையில் அந்த சமயத்தில் தன்னுடைய படக்குழுவில் உள்ள லைட் மேன் மாதிரியான சாதாரண ஊழியர்கள் வீடு கூட இல்லாமல் இருந்தனர். அவர்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என நினைத்தார் எஸ்.பி முத்துராமன். பிறகு அவர் இதுக்குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் பேசியுள்ளார்.
இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் சம்பளம் வாங்காமல் ஒரு படம் எஸ்.பி முத்துராமனுக்கு நடித்து கொடுத்தார். அந்த படத்தில் வரும் லாபத்தை மொத்தமாக படக்குழுவில் உள்ள ஊழியர்களுக்கே செலவு செய்ய வேண்டும் என முடிவெடுத்தனர்.

அப்படி ரஜினிகாந்த் நடித்த திரைப்படம்தான் பாண்டியன். பாண்டியன் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்று கொடுத்தது. அந்த தொகையை கொண்டு ஊழியர்களுக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் எஸ்.பி முத்துராமன் செய்துள்ளார்.








