தமிழில் தற்சமயம் உச்சப்பட்ச இயக்குனராக இருந்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். பெரும்பாலும் லோகேஷ் இயக்கும் திரைப்படங்கள் எல்லாமே பெரும் ஹிட் என்கிற நிலை இருக்கிறது. அதனால் தமிழ் சினிமாவில் அதிக வருமானம் வாங்கும் ஒரு இயக்குனராக லோகேஷ் இருக்கிறார்.
சினிமாவுக்கு வந்த புதிதில் ஒரு சூப்பர் ஹீரோ படம் எடுக்க வேண்டும் என்பதுதான் லோகேஷ் கனகராஜின் பெரும் கனவாக இருந்தது. நம்முடைய காலங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் காமிக்ஸ் கலாச்சாரம் இருந்தது.
வெளிநாட்டு மக்களை போலவே நம்மாட்களும் அதிகமாக காமிக்ஸ் என்னும் சித்திர படங்கள் வரைந்த புத்தகத்தின் மீது ஈடுபாடு காட்டி வந்தனர். அந்த சமயத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த காமிக்ஸ்தான் இரும்புகை மாயாவி.
இந்த கதையின்படி இரும்புக்கை மாயாவி என்பவருக்கு ஒரு கைக்கு பதிலாக இரும்பால் ஆன கை இருக்கும். அந்த கையை அவர் மின்சாரத்தில் வைத்த அடுத்த நொடியே அவரது உடல் மறைந்துவிடும். அந்த இரும்புக்கை மட்டுமே வெளியில் தெரியும். அதே மாதிரி அந்த இரும்புக்கையால் அவர் அடித்தால் சக்தி வாய்ந்த அடி விழும்.

இந்த பிரபலமான காமிக்ஸைதான் படமாக்க நினைத்தார் லோகேஷ் கனகராஜ். அந்த கதையை நடிகர் சூர்யாவிடம் கூறினார். சூர்யாவுக்குமே அந்த கதை மிகவும் பிடித்திருந்தது. அதனை தொடர்ந்து அதை படமாக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.
ஆனால் அப்போதுதான் ஓகேஷ் தனது முதல் படமான மாநகரம் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதனால் அடுத்த படமே ஒரு பெரிய நடிகரை வைத்து பெரிய பட்ஜெட்டில் செய்ய வேண்டாம் என நினைத்தார் லோகேஷ். இதனால் அந்த படம் அப்போது படமாக்கப்படவில்லை.
ஆனால் சூர்யாவுக்கு லோகேஷின் படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை மட்டும் இருந்துக்கொண்டுதான் இருந்தது. அதனை தொடர்ந்துதான் இப்போது ரோலக்ஸ் படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா.







