ஆஸ்கர் இறுதி பட்டியலில் ’நாட்டு நாட்டு’ பாடல்! வரலாற்றில் இதுதான் முதல் தடவை!

‘Naatu Naatu’ Song from RRR, Performed by Jr NTR, Ramcharan
Social Media Bar

தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். கடந்த ஆண்டு வெளியான இந்த படம் உலகம் முழுவதும் 1000 கோடிக்கு மேல் வசூலித்து பெரும் வசூல் சாதனையை படைத்தது.

அதை தொடர்ந்து ராஜமௌலி ஆர்.ஆர்.ஆர் படத்தை கோல்டன் க்ளோப் விருதுகள், ஆஸ்கர் விருதுகள் என பல விருது போட்டிகளுக்கும் கொண்டு சென்றுள்ளார். ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்த்த பிரபல ஹாலிவுட் இயக்குனர்கள் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரூன் உள்ளிட்டோர் படத்தை மிகவும் ரசித்து பார்த்ததாக பாராட்டியுள்ளனர்.

‘Naatu Naatu’ Song from RRR, Performed by Jr NTR, Ramcharan

முன்னதாக ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடலுக்கான கோல்டன் க்ளோப் விருதை வென்றது. அந்த விருதை மேடையில் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில் தற்போது ஆஸ்கர் விருதுக்கான இறுதி பட்டியலில் சிறந்த பாடலுக்கான பிரிவில் ‘நாட்டு நாட்டு’ பாடல் இடம்பிடித்துள்ளது. அதனால் கண்டிப்பாக சிறந்த பாடலுக்கான விருதை இந்த பாடல் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் ஒரு இந்திய பாடல், முக்கியமாக தெலுங்கு பாடல் இடம்பெறுவது வரலாற்றில் இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. இது இந்திய சினிமா ரசிகர்களை கட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.