கே.ஜி.எஃப் 2வை ப்ரேக் செய்த பதான்! –ஹிந்தியில் புது சாதனை!

போன வருடம் இந்திய அளவில் ஹிட் கொடுத்த முக்கியமான திரைப்படம் கே.ஜி.எஃப் 2. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சினிமாவில் பலரும் பேன் இந்தியா திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்று களத்தில் இறங்கினர்.

Social Media Bar

ஆனாலும் தென்னிந்திய திரைப்படங்களே தொடர்ந்து 1000 கோடி வரை வசூல் செய்து வருகின்றன. இந்த நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தற்சமயம் வெளியான திரைப்படம் பதான்.

2018 இல் ஜீரோ என்கிற படத்தில் நடித்த பிறகு ஷாருக்கான் எந்த படத்திலும் நடிக்கவில்லை. பிரம்மாஸ்திரா மாதிரியான சில படங்களில் கேமியோ கதாபாத்திரத்தில் மட்டும் நடித்திருந்தார். இந்நிலையில் நான்கு வருடங்களுக்கு பிறகு ஷாருக்கான் நடித்து தற்சமயம் வெளியாகி இருக்கும் திரைப்படம் பதான்.

இதற்கு முன்பு பாலிவுட்டில் ஓப்பனிங் வசூல் என பார்க்கும்போது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் 53.6 கோடிக்கும், வார் திரைப்படம் 53.35 கோடிக்கும் ஓடி இருந்தது. அதை ப்ரேக் செய்த கே.ஜி.எஃப் 2 53.95 கோடி ரூபாய் வசூலித்து பாலிவுட் கலெக்‌ஷனில் முதல் இடத்தில் இருந்தது.

இந்நிலையில் கே.ஜி.எஃப்பை ப்ரேக் செய்து முதல் நாளே 55 கோடிக்கு ஓடி வசூல் சாதனை செய்துள்ளது பதான். தற்சமயம் பாலிவுட்டில் முதல்நாளே அதிக வசூல் சாதனை படைத்த படங்களில் முதல் இடத்தில் பதான் உள்ளது.

ஆனால் கன்னட நாயகரான யஷ் நடித்து பாலிவுட்டில் ஹிட் அடித்த கே.ஜி.எஃப் 2 வை பாலிவுட்டின் டாப் நாயகரான ஷாருக்கான் எப்படி போட்டியாக எடுத்துக்கொள்ள முடியும் என கேள்வி எழுப்புகின்றனர் யஷ் ரசிகர்கள்