Connect with us

ஒரே கதையை மூணு தடவை படமா எடுத்துருக்காங்க, ஆனாலும் மூணுமே ஹிட்டு – இப்படியும் நடந்துச்சா?

Cinema History

ஒரே கதையை மூணு தடவை படமா எடுத்துருக்காங்க, ஆனாலும் மூணுமே ஹிட்டு – இப்படியும் நடந்துச்சா?

cinepettai.com cinepettai.com

தமிழ் சினிமாவில் சில படங்கள் எதிர்பார்த்ததை விடவும் பெரும் ஹிட் கொடுத்திருக்கும். இதனால் அதே கதையம்சத்தில் மீண்டும் மீண்டும் படம் எடுக்க திட்டமிடுவார்கள். ஆனால் அடுத்தடுத்து வரும் படங்கள் பெரிதாக ஹிட் கொடுக்காது.

உதாரணமாக லாரன்ஸ் இயக்கிய முனி படத்தின் பாகங்கள், சுந்தர் சியின் அரண்மனை ஆகியவற்றை கூறலாம். திரும்ப திரும்ப ஒரே கதை அம்சத்தை கொண்டு படமாக்கும்போது அது மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும். ஆனால் ஒரே கதை மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் எடுக்கப்பட்டு தமிழில் மூன்று முறையுமே ஹிட் கொடுத்த சம்பவங்கள் நடந்துள்ளன.

தில்லானா மோகனாம்பாள்

1968 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.பி நாகராஜன் இயக்கத்தில் தயாராகி அப்போது பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் தில்லானா மோகனாம்பாள். இதில் நடிகர் சிவாஜி மற்றும் பத்மினி நடித்திருந்தனர். இப்போது வரை வெகுவாக பேசப்படும் ஒரு படமாக தில்லானா மோகனாம்பாள் உள்ளது.

கதைப்படி பிரபல நாதஸ்வர வித்வானாக உள்ள சிவாஜிக்கும், பிரபல பரதநாட்டிய நடன கலைஞராக இருக்கும் பத்மினிக்கும் இடையே யார் பெரியவர் என்கிற போட்டி வரும். அதுவே அவர்கள் இருவருக்கும் இடையே காதல் உருவாக காரணமாக அமையும். அதற்கு பிறகு இவர்கள் இருவரும் எப்படி ஒன்று சேருகிறார்கள் என கதை செல்லும்.

கரகாட்டக்காரன்

1989 ஆம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா நடிப்பில் வெளியான திரைப்படம் கரகாட்டக்காரன். பெரும் ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படம்.

இந்த படத்திலும் கதைப்படி ராமராஜன் வெளியூர் கரக்காட்ட ஆட்டக்காரராக இருப்பார். அவருக்கும் உள்ளூர் ஆட்டக்காரரான கனகாவிற்கும் இடையே சின்ன போட்டி இருக்கும். அதுவே இவர்கள் இருவருக்குமிடையே காதல் உருவாக காரணமாக அமையும். பிறகு இருவரும் எப்படி ஒன்று சேருகிறார்கள் என்பதாக கதை செல்லும்.

சங்கமம்

கரகாட்டக்காரன் வெளியாகி 10 வருடம் கழித்து 1999 இல் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான திரைப்படம் சங்கமம். இந்த படத்தில் ரகுமான் மற்றும் விந்தியா நடித்திருந்தனர்.

நாட்டுபுற நடன கலைஞரான ரகுமானுக்கும், பரத நடன கலைஞரான விந்தியாவிற்கும் இடையே நடக்கும் போட்டி, அதற்கு நடுவே அவர்களுக்குள் ஏற்படும் காதலை வைத்து இந்த திரைப்படம் செல்லும்.

ஆக இந்த மூன்று திரைப்படங்களுமே ஒரே மாதிரியான கதை அம்சத்தை கொண்டிருந்தாலும் கூட வெவ்வேறு காலக்கட்டங்களில் வெளியாகி மூன்றுமே பெரும் ஹிட் கொடுத்தன.

POPULAR POSTS

manikandan kavin
karathe raja prakash raj
vetrimaaran praveen gandhi
mgr vijay
gv prakash saindavi
To Top