Tamil Cinema News
விஜய் ஆண்டனி சாரை பார்க்க விடுங்க!.. கண் கலங்கிய சிறுவன்..
தமிழ் சினிமாவில் ஒரு சாதாரண மனிதனாக இருந்து தற்சமயம் பெரும் உச்சத்தை தொட்டிருப்பவர் நடிகர் விஜய் ஆண்டனி. சவுண்ட் இஞ்சினியராக சினிமாவிற்கு வந்த விஜய் ஆண்டனி சுக்கிரன் என்கிற திரைப்படம் மூலமாக இசை அமைப்பாளராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் இசையமைத்த டிஸ்யும், காதலில் விழுந்தேன், வேட்டைக்காரன் என பல படங்களில் பாடல்கள் பெரும் ஹிட் கொடுத்தன.
ஆனால் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக இவர் சினிமாவில் நடிகனாக நடிக்க துவங்கினார். தற்சமயம் பிரபலமான நடிகராக விஜய் ஆண்டனி இருந்து வருகிறார். இரு நாட்களுக்கு முன்னர் அவரது மகள் மீரா தற்கொலை செய்துக்கொண்ட செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து விஜய் ஆண்டனி குடும்பமே மீளா துயரில் இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜய் ஆண்டனி திரைப்படமான பிச்சைக்காரன் திரைப்படத்தில் அவருடன் நடித்த சிறுவனுக்கும் இந்த செய்தி சென்றுள்ளது. அதனையடுத்து விஜய் ஆண்டனியை பார்ப்பதற்காக அந்த சிறுவன் செக்யூரிட்டியிடம் பேசியுள்ளான்.
பிறகு உள்ளே சென்று பார்த்தப்போது விஜய் ஆண்டனி அழுதப்படி அமர்ந்திருந்தார். அது எனக்கு மிகுந்த வேதனையாக இருந்தது என அந்த சிறுவன் கூறியுள்ளான்.
