இந்த இயக்குனரே பாராட்டிட்டாரா? –  அதிக வரவேற்பை பெற்று வரும் சுழல் 

வெளிநாடுகளை போலவே நம் நாட்டிலும் வெப் சீரிஸ்கள் மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. பல வகையான வெப் சீரிஸ்கள் தமிழிலும் வந்த வண்ணம் உள்ளன. நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட் ஸ்டார் என அனைத்து நிறுவனங்களும் இந்தியா மீது கவனம் செலுத்தி வருகின்றன.

கடந்த ஜூன் 17 அன்று அமேசான் ப்ரைமில் ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், பார்த்திபன் இன்னும் பலர் நடித்து வெளியான வெப் சீரிஸ் சுழல்.

ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் தங்கை காணாமல் போவதை வைத்து கதை செல்கிறது. வெளியான நாள் முதல் இந்த சீரிஸ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பலரும் இதை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழின் மிக முக்கிய இயக்குனரான ராஜமெளலி அவர்கள் இந்த சீரிஸை பாராட்டியுள்ளார். இதனால் இந்த சீரிஸ் இன்னும் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. தமிழில் வெளியாகி அதிக மொழிகளுக்கு டப்பிங் செய்யப்பட்டிருக்கும் முதல் சீரிஸ் சுழல் என கூறப்படுகிறது.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh