Cinema History
ஆமா யாரு இவரு!.. கல்யாணசுந்தரனார் கேட்ட ஒரு கேள்விக்காக சிவாஜி நடித்த திரைப்படம்!..
தமிழ் திரைப்பட நடிகர்களுக்கெல்லாம் குரு என சிவாஜி கணேசனை கூறலாம். அந்த அளவிற்கு தமிழில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் பல திரைப்படங்களில் நடித்தவர் சிவாஜி கணேசன். கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கும் சிவாஜி கணேசன் நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது எனக் கூறலாம்.
மகனாக, அப்பாவாக, அண்ணனாக, தம்பியாக என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார் சிவாஜி கணேசன். அதே போல போலீஸ், திருடன், வாத்தியார், நீதிபதி என அவர் நடிக்காத கதாபாத்திரமே கிடையாது எனக் கூறலாம்.
இப்படிப்பட்ட சிவாஜி கணேசனையே தெரியாது என்று ஒரு நபர் கூறிய சம்பவமும் நடந்தது சிவாஜி கணேசன் ஒரு திருமணத்திற்கு சென்றிருந்த பொழுது அந்த திருமணத்திற்கு திரு.வி.கல்யாண சுந்தரமும் வந்திருந்தார் அப்பொழுது சிவாஜி கணேசனை பார்த்த கல்யாணசுந்தரம் அவருக்கு கை கொடுத்தார் பிறகு தம்பிக்கு என்ன உத்தியோகம் என்று கேட்டார்.
அதாவது சிவாஜிகணேசன் என்ன வேலை பார்க்கிறார் என கேட்டார். அவர் ஒரு நடிகர் என்பது தெரியாதவராக திரு.வி.க இருந்துள்ளார் .அந்த நேரத்தில் அதற்காக கோபப்படாத சிவாஜி இன்னும் பல மக்களுக்கு நம்மைப் பற்றி தெரியவில்லை என்று அறிந்து கொண்டார்.
இதனை அடுத்து அவர் நடித்த படம் கப்பலோட்டிய தமிழன் திருவிக சுதந்திர வேட்கை கொண்ட நபராக இருந்ததால் அந்த திரைப்படத்தை எதேர்ச்சையாக பார்த்தார். அப்பொழுதுதான் சிவாஜி கணேசன் எவ்வளவு பெரிய நடிகர் என்பது திரு.வி.கவிற்கு தெரிந்தது. உடனே அவரை வீட்டிற்கு அழைத்து மரியாதை செலுத்தியுள்ளார் திரு.வி.க.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்