Connect with us

மஞ்சுமல் பாய்ஸ் படத்தை ஓரந்தள்ளிடுச்சு!.. எப்படியிருக்கு ஆடுஜீவிதம் திரைப்படம்!..

aadujeevitham 2

Movie Reviews

மஞ்சுமல் பாய்ஸ் படத்தை ஓரந்தள்ளிடுச்சு!.. எப்படியிருக்கு ஆடுஜீவிதம் திரைப்படம்!..

Social Media Bar

கடந்த சில மாதங்களாக மலையாளத்தில் தொடர்ந்து சிறப்பான திரைப்படங்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. ஏற்கனவே பிரம்மயுகம், மஞ்சுமல் பாய்ஸ், ப்ரேமலூ ஆகிய மூன்று திரைப்படங்களுமே தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அதிலும் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் கேரளாவை விட தமிழ்நாட்டில் அதிக வசூலை படைத்தது. இந்த நிலையில் அந்த வரிசையில் நான்காவது படமாக ஆடுஜீவிதம் திரைப்படம் அமைந்துள்ளது. ஆடுஜீவிதம் திரைப்படமானது உண்மை கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

ப்ளஸ்ஸி என்னும் இயக்குனர் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். 1990 களில் நஜுப் என்னும் இளைஞன் கேரளாவில் இருந்து சவுதி அரேபியாவிற்கு தொழில் தேடி செல்கிறான். அப்போது அங்கு அவனுக்கு நல்ல வேலைகள் எதுவும் கொடுக்காமல் பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் வேலையை கொடுக்கின்றனர்.

அந்த பாலைவனத்தில் அவனை தவிர யாரும் கிடையாது. குடிக்க மட்டும் சிறிதளவு தண்ணீர் கிடைக்கும். குளிப்பதற்கெல்லாம் தண்ணீரே கிடையாது. இப்படி ஒரு நரக வாழ்க்கையில் சிக்கி கொள்ளும் நஜுப் அங்கிருந்து தப்பி கேரளா வந்து சேர்வதுதான் படத்தின் கதை.

இது உண்மையிலேயே நடந்த கதை ஆகும். ஏற்கனவே இது தமிழிலும் மலையாளத்திலும் ஆடுஜீவிதம் என்கிற பெயரிலேயே நாவலாக வந்துள்ளது. இந்த படத்தில் ப்ரித்தீவிராஜ் நஜுப்பாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து படத்திற்கான படப்பிடிப்புகள் உலகில் உள்ள பல பாலைவனங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த படம் ஹாலிவுட் திரைப்படத்திற்கு நிகராக படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் ஒளிப்பதிவு என்னதான் நாம் ஏ.சி திரையரங்கில் இருந்தாலும் ஏதோ வெயிலுக்கு நடுவே பாலைவனத்தில் மாட்டி கொண்டதாக உணர வைக்கிறது.

ஏ.ஆர் ரகுமானின் இசை படத்தில் டாப் டக்கராக அமைந்துள்ளது. பாலைவனத்தில் மணல் பறக்கும்போது எழும் சிறிய ஓசைகளை கூட கவனமாக பிண்ணனியில் சேர்த்துள்ளார். எனவே ஆடுஜீவிதம் திரைப்படம் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தை விடவும் சிறப்பான திரையரங்க அனுபவத்தை தருவதாக கூறப்படுகிறது.

எனவே கண்டிப்பாக இந்த படம் ஆஸ்கருக்கு அனுப்ப தகுதியான படம் என்கின்றனர் திரைப்பட விமர்சகர்கள். மேலும் இது மஞ்சுமல் பாய்ஸை விடவும் அதிக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட இந்தியாவிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

To Top