News
எனக்கு அவ்வளவா விஷயம் தெரியாதுன்னுதான் அமீரை கூட சேர்த்துக்கிட்டேன்!.. வெற்றிமாறன் வாய்ப்பு கொடுக்க இதுதான் காரணம்!.
தமிழ் சினிமாவில் சமூக கருத்துக்களை திரைப்படங்களில் வைத்து திரைப்படங்களை எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர்கள் இயக்குனர் வெற்றிமாறனும் அமீரும்,
இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அமீர் பிறகு தனியாக படம் எடுக்க வேண்டும் என்று பாலாவை விட்டு பிரிந்து வந்தார். அப்படியாக அமீர் எடுத்த திரைப்படங்கள் எல்லாம் நல்ல வெற்றியை கொடுத்தன.

அமீர் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி என இருவரையும் வைத்து திரைப்படம் எடுத்திருக்கிறார். அவரின் பருத்தி வீரன் திரைப்படம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான படமாகும். வெற்றிமாறனும் அமீரும் இணைந்து சில திரைப்படங்களில் கூட்டணி போட்டிருக்கின்றனர்.
அதாவது வெற்றிமாறன் இயக்கும் திரைப்படங்களில் அமீர் நடித்திருக்கிறார். ஏற்கனவே வடசென்னை திரைப்படத்தில் ராஜன் என்ற மிக முக்கியமான கதாபாத்திரத்தை அமீர் சிறப்பாக எடுத்து நடத்தி நடித்திருந்தார். அதை தொடர்ந்து வெற்றிமாறன் தற்சமயம் இயக்கும் வாடிவாசல் திரைப்படத்திற்கும் அமீரை நடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து வெற்றிமாறன் கூறும்பொழுது வடசென்னை திரைப்படத்தைப் பொறுத்தவரை அந்த திரைப்படத்தை பற்றி எனக்கு முழுமையாக தெரியும் நடிப்பதற்கு மட்டும் தான் அமீரை கேட்டேன். ஆனால் தற்சமயம் வாடிவாசல் திரைப்படத்தை பொறுத்தவரை சாதி ரீதியான அந்த விஷயங்கள் என்னைவிட அமீர்க்குதான் அதிகமாக தெரியும் எனவேதான் முக்கியமாக நான் அமீரை அந்த படத்திற்கு நடிக்க அழைத்துள்ளேன் என்று வெற்றிமாறன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்
