Connect with us

என்ன படவாய்ப்பு இல்லாமல் அந்த தொழில் பண்றேன்னு சொன்னாங்க!.. பரத்திற்கே ஷாக் கொடுத்த நெட்டிசன்கள்!.

bharath

News

என்ன படவாய்ப்பு இல்லாமல் அந்த தொழில் பண்றேன்னு சொன்னாங்க!.. பரத்திற்கே ஷாக் கொடுத்த நெட்டிசன்கள்!.

Social Media Bar

பாய்ஸ் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் பரத். பாய்ஸ் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தாலும் கூட அதற்கு பிறகு அவருக்கு கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்தது.

அவர் நடித்த 4 ஸ்டூடண்ட்ஸ் என்னும் திரைப்படம் தமிழ் மலையாளம் இரண்டு மொழிகளிலும் நல்ல வெற்றியை பெற்றது. அதற்கு பிறகு தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் வாய்ப்பை பெற்று நடித்து வந்தார் பரத்.

அவையாவுமே நல்ல வெற்றியைதான் கொடுத்து வந்தன. ஆனால் போக போக பரத்தின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் வீழ்ச்சியை காணத் துவங்கியது. இந்த நிலையில் அவரும் பல வகையான புது கதைகளை நடித்து பார்த்தார். எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை.

இந்த நிலையில் மீண்டும் ஒரு படத்தில் ஆட்டோக்காரராக களம் இறங்குகிறார் பரத். இந்த படப்பிடிப்பு போஸ்டர்களை பார்த்த ரசிகர்கள் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் போனதால் பரத் தற்சமயம் ஆட்டோ ஓட்டி கொண்டுள்ளார் என வதந்தியை பரப்பி விட்டனர்.

இந்த நிலையில் இதற்கு பதிலளித்த பரத் அந்த செய்தியை கேட்டு நானே ஒரு நிமிடம் ஆடி போய்விட்டேன். இப்போதைய நிலையில் சினிமாவில் எந்த மாதிரியான படம் வெற்றியடையும் என கணிக்கவே முடியவில்லை. சாதாரண கதையம்சம் கொண்ட திரைப்படம் நல்ல வெற்றியை கொடுக்கிறது.

சிறப்பான திரைக்கதையை கொண்ட திரைப்படங்கள் தோல்வியடைகின்றன என கூறியுள்ளார்.

To Top