Connect with us

உங்க பொண்ணா இருந்தா இப்படி பேசுவீங்களா!.. தாயே தப்பு செஞ்சாலும் தப்பு தப்புதான்!.. பக்கத்து வீட்டு பெண்ணால் கடுப்பான சந்திரபாபு!.

chandrababu

Cinema History

உங்க பொண்ணா இருந்தா இப்படி பேசுவீங்களா!.. தாயே தப்பு செஞ்சாலும் தப்பு தப்புதான்!.. பக்கத்து வீட்டு பெண்ணால் கடுப்பான சந்திரபாபு!.

Social Media Bar

Actor Chandrababu : கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் காமெடி நடிகர்களுக்கு இப்போது இருப்பதை விட அதிகமான வரவேற்பு இருந்தது. அனைத்து திரைப்படத்திலும் எப்படியும் காமெடி நடிகர்கள் கண்டிப்பாக இருந்து விடுவார்கள்.

அந்த அளவிற்கு அவர்களுக்கு முக்கியத்துவம் இருந்தது. இதனாலேயே கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் நிறைய காமெடி நடிகர்கள் இருந்தனர். சந்திரபாபு, நாகேஷ், சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், தங்கவேலு இப்படி எத்தனையோ பேரை சொல்லிக் கொண்டே போகலாம்.

J._P._Chandrababu
J._P._Chandrababu

ஆனால் அதில் சந்திரபாபு சற்று மாறுபட்ட ஒரு காமெடி நடிகர் என கூறலாம். வாய் பேச்சால் மட்டுமின்றி உடல் மொழிகளையும் பயன்படுத்தி மக்களை சிரிக்க வைக்க கூடியவர் சந்திரபாபு. அதனால்தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்து வெகு குறுகிய காலத்திலேயே அதிக வரவேற்பை பெற்றார்.

தொடர்ந்து இயக்குனராக ஒரு திரைப்படத்திலும் பணி புரிந்திருக்கிறார். சந்திரபாபு. தமிழ் சினிமாவிலேயே முதன் முதலில் ஒரு லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கிய காமெடி நடிகர் சந்திரபாபுதான். சந்திரபாபு ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிய பொழுது சிவாஜி கணேசனும் எம்ஜிஆரும் கூட அந்த அளவு சம்பளம் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.

கோபமான சந்திரபாபு:

இப்படி சந்திரபாபு மிகவும் பிரபலமாக இருந்த பொழுது அவரது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் ஒரு பெண் வாசித்து வந்தார். அவர் எப்பொழுதும் சந்திரபாபுவை பார்க்கும் பொழுது சிரித்துவிட்டு செல்வார். பதிலுக்கு சந்திரபாபுவும் அந்த பெண்ணை பார்த்து சிரித்து வைப்பார்.

இதை சந்திரபாபுவின் வீட்டார் தொடர்ந்து பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் ஒருநாள் சந்திரபாபுவிற்கு உடல்நலம் இல்லாமல் போகவே சந்திரபாபுவின் வீட்டிற்கு வந்து அவரிடம் நலம் விசாரித்துவிட்டு அந்த பெண் சென்று இருக்கிறார்.

actress vijayakumari
actress vijayakumari

இதனால் கோபம் அடைந்த சந்திரபாபுவின் தாய் அந்த பெண்ணை மிகவும் தவறாக திட்டிவிட்டார். இந்த நிலையில் இந்த விஷயம் அந்த பெண்ணின் வீட்டிற்கு தெரியவே அவர்கள் சந்திரபாபுவின் வீட்டிற்கு சண்டை போட வந்துவிட்டனர்.

இந்த நிலையில் விஷயத்தை கேள்விப்பட்ட சந்திரபாபு தனது தாயாரை பார்த்து உங்கள் பெண்ணாக இருந்தால் இப்படி தகாத வார்த்தைகளால் திட்டி இருப்பீர்களா என்று கூறி அவரை கண்டித்தார். பிறகு அந்த பெண்ணிடமும் சென்று இதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த பெண்ணும் பிறகு தமிழ் சினிமாவில் பெரிய கதாநாயகியாக மாறினார். அவர் வேறு யாரும் அல்ல நடிகை விஜயகுமாரி தான் அந்த பக்கத்தை விட்டு பெண்.

To Top