Tamil Cinema News
படப்பிடிப்பில் விபத்து.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்தி..!
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார். கார்த்தி வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீப காலங்களாகவே அவர் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்து வருகின்றன.
சமீப காலங்களாக அவர் நடிப்பில் வெளி வந்த பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் மாதிரியான படங்கள் எல்லாமே நல்ல வெற்றியை கொடுத்தன. அதனை தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்
அந்த வகையில் தற்சமயம் வா வாத்தியார் மற்றும் சர்தார் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். சர்தார் திரைப்படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து சர்தார் 2 திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.
இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகள் நேற்று படமாக்கப்பட்டது. இந்த நிலையில் படப்பிடிப்பின்போது தவறுதலாக கார்த்திக்கு காலில் அடிப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள்ளார்.
அவருக்கு காலில் வீக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து இதனால் படப்பிடிப்பு தற்சமயம் நிறுத்தப்பட்டுள்ளது.
