ஸ்கூல் பசங்க இதெல்லாம் பண்றாங்கன்னு சொல்லும்போது பயமா இருக்கு!.. அதிர்ச்சியடைந்த கார்த்தி!..

தற்சமயம் வளர்ந்து வரும் தொழில்நுட்பமும் பொருளாதாரமும் பலவித மாற்றங்களை பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அது அவர்களை சில தவறான விஷயங்களுக்கும் இட்டு செல்கிறது என்று கூறப்படுகிறது.

இது குறித்து நடிகர் கார்த்தி கூறும் பொழுது கூல் லிப் எனப்படும் போதை பொருள் பள்ளி மாணவர்கள் மத்தியில் மிகவும் அதிகமாக பரவி இருக்கிறது. அது எனக்கு மிகவும் அச்சத்தை ஏற்படுகிறது என்று கார்த்தி மிக வெளிப்படையாக ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

Social Media Bar

அகரம் அறக்கட்டளை மூலமாக இந்த செய்தி தனக்கு கிடைத்ததாக அவர் கூறுகிறார் அதாவது பள்ளி மாணவர்களுக்கு மிக எளிதாகவே இந்த கூல் லிப் எனப்படும் போதைப் பொருள் கிடைக்கிறது அது தடை செய்யப்பட்ட பொருள் என்பதால் அதிக விலைக்கு விற்கிறது. அப்படியும் அதை வாங்குவதற்கு எப்படி மாணவர்களுக்கு காசு கிடைக்கிறது என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

நான் கல்லூரி படிக்கும் காலங்களில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கூட இது பரவலாக இல்லை. ஆனால் இப்போது கேள்விப்படும்போது பள்ளி மாணவர்களே இதை பயன்படுத்துகின்றனர். எனவே இதுக்குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.