உனக்கு ரொமான்ஸ் எல்லாம் செட் ஆகாது!.. நான் சொல்றப்படி செய்!.. கார்த்திக்கு மனைவி கொடுத்த அட்வைஸ்!..

Actor Karthi : பொதுவாக நடிகர்கள் தங்களுடைய 18 அல்லது 20 வயதுகளிலேயே திரைப்படங்களில் நடிக்க தொடங்கி சினிமாவில் தங்களது கால் தடங்களை பதிக்க நினைப்பார்கள்.

ஏனெனில் வயதாகி விட்டால் அவர்களை மக்கள் விரும்ப மாட்டார்கள் என்று ஒரு நம்பிக்கை தமிழ் சினிமாவில் இருந்தது. அதை அடித்து நொறுக்கியவர் நடிகர் கார்த்தி. கார்த்தி தன்னுடைய 27 வது வயதில்தான் தனது முதல் திரைப்படமான பருத்திவீரன் திரைப்படத்திலேயே நடித்தார்.

ஆனால் தற்சமயம் தமிழ் சினிமாவில் சூர்யாவிற்கு நிகரான ஒரு மார்க்கெட்டை 50 படங்களுக்குள்ளாகவே பிடித்து விட்டார் கார்த்தி. கார்த்தி முதல் முதலாக நடித்த பருத்திவீரன் திரைப்படத்தில் காதலுக்கு ஒரு  முக்கியத்துவம் இருந்தது.

Social Media Bar

அதனை தொடர்ந்து அடுத்து வந்த பையா திரைப்படம் முழுக்க முழுக்க காதல் திரைப்படமாக அமைந்தது. இந்த இரண்டு திரைப்படங்களும் நல்ல வெற்றியை கொடுத்தன. அதற்குப் பிறகு நடிகர் கார்த்திக்கு திருமணமானது திருமணமான பிறகு முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படங்களில் தான் நடித்தார் கார்த்தி.

ஆனாலும் அந்த திரைப்படங்களில் காதல் காட்சிகள் மட்டும் அவ்வப்போது இருந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் ஒருமுறை கார்த்தியை அழைத்து பேசிய அவரது மனைவி உன் திரைப்படங்களில் உனக்கு காதல் காட்சிகள் அவ்வளவாக செட்டாகவில்லை.

ஆக்ஷன் திரைப்படங்கள் தான் உனக்கு சிறப்பாக இருக்கிறது எனவே இனிவரும் திரைப்படங்களில் காதல் காட்சியை குறைத்துக் கொள்வது நல்லது என்று கூறி இருக்கிறார். அதன்படி அடுத்த நடித்த கைதி திரைப்படத்தில் கதாநாயகியே இல்லாமல் நடித்தார் கார்த்தி அந்த திரைப்படம் எதிர்பார்த்ததைவிட பெரிய வெற்றியை கொடுத்தது. இதை பேட்டியில் கூறிய கார்த்தி எனது மனைவி என்னை பற்றி சரியாக புரிந்து வைத்திருக்கிறார் என்று கூறியிருந்தார்.