தாழ்த்தப்பட்ட மக்கள் பண்ற தப்பு தெரியுமா? சர்ச்சையை கிளப்பிய நடிகர் கருணாஸ்.!
நடிகர் கருணாஸ் தமிழ் சினிமாவில் காமெடியனாக ஒரு சில திரைப்படங்களில் பிரபலமாக இருந்தவர். அவர் நிறைய திரைப்படங்களில் இவர் கதாநாயகனாக நடித்தாரானால் அந்த திரைப்படங்கள் எதுவுமே பெரிதாக வரவேற்பை பெறவில்லை.
அதற்கு பிறகு அவர் நடித்த கதாபாத்திரங்களை பேசும் வகையில் ஒரு சில திரைப்படங்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் அதனால் அந்த நடிப்பிற்காக அவர் கொஞ்சமாக பேசப்பட்டார்.
கருணாஸ் பேச்சு:
இந்த நிலையில் கருணாஸ் எப்போதுமே தொடர்ந்து சாதியம் சார்ந்து நிறைய விஷயங்களை பேசுவது உண்டு. அப்படியாக சமீபத்தில் அவர் பேசிய சில விஷயங்கள் அதிக சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றன.
அதில் அவர் பேசும் பொழுது ஆளானப்பட்ட தேவர், மருது பாண்டியர் போன்றவர்களுக்கே சாதிய பட்டம் கட்டுன கேவலமானவர்கள் மத்தியில் தான் நாம வாழ்ந்துகிட்டு இருக்கோம்.
தொடர்ந்து சினிமாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நடக்கும் அநீதிகள் பற்றி படம் எடுக்குறாங்க ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் செய்யும் விஷயங்களை யாருமே படம் ஆக்குவது கிடையாது என்று கூறியிருந்தார் இந்த நிலையில் இது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.