Connect with us

சூரிக்கு மட்டும் தர்றாங்களே!.. 1 கோடியில் இருந்து சம்பளத்தை சட்டென உயர்த்திய கவின்!. விஜய் ஆண்டனியே இதுக்கு தேவலாம் போல!.

actor soorie kavin

News

சூரிக்கு மட்டும் தர்றாங்களே!.. 1 கோடியில் இருந்து சம்பளத்தை சட்டென உயர்த்திய கவின்!. விஜய் ஆண்டனியே இதுக்கு தேவலாம் போல!.

Social Media Bar

தற்சமயம் தமிழ் சினிமாவில் நடிகர்கள் பஞ்சம் என்பது அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழின் டாப் நடிகர்களாக விஜய்யும் அஜித்தும் இருந்து வந்தனர். ஆனால் எதிர்காலத்தில் இவர்கள் இருவருமே சினிமாவில் இருப்பார்களா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

விஜய் அரசியலுக்கு சென்றதால் அவர் இனி நடிக்க போவதில்லை என கூறப்படுகிறது. அஜித்தும் கூட தொடர்ந்து படம் நடிப்பது சந்தேகமே என பேச்சுக்கள் இருந்து வருகிறது. இந்த நிலையில் இதை பயன்படுத்திக்கொள்ளும் புது நடிகர்கள் தங்கள் சம்பளத்தை உயர்த்த துவங்கியுள்ளனர்.

விடுதலை படத்தின் வெற்றியை தொடர்ந்து சூரியும் கதாநாயகன் நடிகராகி உள்ளார். கொட்டுக்காளி, ஏழு மலை ஏழு கடல் ஆகிய படங்களில் ஏற்கனவே நடித்து வருகிறார். இந்த இரு படங்களுக்குமே அதிக வரவேற்பு இருக்கும் காரணத்தினால் தற்சமயம் சம்பளத்தை உயர்த்தியுள்ளார் சூரி.

kavin
kavin

அதன்படி அவர் 8 கோடி சம்பளமாக கேட்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த நிலையில் டாடா திரைப்படத்தில் 1 கோடி சம்பளம் வாங்கிய கவின் தற்சமயம் சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம். காமெடி நடிகர் சூரியே 8 கோடி வாங்கும்போது தனக்கு 7 கோடியாவது சம்பளம் வேண்டும் என்கிறாராம் கவின்.

இதனால் தயாரிப்பாளர்கள் எல்லாம் அதிர்ச்சியில் இருக்கின்றனராம். ஏனெனில் நடிகர் விஜய் ஆண்டனியே 5 படங்கள் வரை 2 கோடிதான் சம்பளம் வாங்கி வந்தாராம். இந்த நிலையில் புது நடிகர்கள் இப்படி அதிக சம்பளம் கேட்பது படத்தை தயாரிப்பதில் பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளது.

To Top