வெற்றிமாறனிடம் வாய்ப்பை இழக்க தயாராக இல்லை!.. சுந்தர் சியை நிராகரித்த கவின்!.. பெரிய வாய்ப்பாச்சே!..

Kavin Vetrimaaran: தமிழில் தற்சமயம் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் கவின் இருக்கிறார். அவர் நடித்த லிப்ட் திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட அதற்கு பிறகு அவர் நடித்த டாடா திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து வெறும் ஆக்ஷன் ஹீரோவாக மட்டும் நடிக்காமல் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார் கவின். இந்த நிலையில் காமெடி படங்களுக்கு பிரபலமான இயக்குனரான சுந்தர் சி தற்சமயம் கலகலப்பு திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்குவதற்கான வேலையில் இறங்கி இருக்கிறார்.

இதற்கு முன்பு அவர் எடுத்த கலகலப்பு முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வெற்றியை கொடுத்ததால் மூன்றாம் பாகத்தையும் நல்ல நகைச்சுவை திரைப்படமாக எடுக்க முடிவு செய்திருக்கிறார் சுந்தர் சி.

Social Media Bar

மூன்றாம் பாகத்தில் கதாநாயகனாக கவின் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது இயக்குனர் சுந்தர் சியின் விருப்பமாக இருந்தது. இயக்குனர் சுந்தர்சியைப் பொருத்தவரை அவர் நிறைய புது முக நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் சுந்தர் சி.

இந்த நிலையில் சுந்தர்சி யே வாய்ப்பு கொடுத்தும் அதை வேண்டாம் என்று தவிர்த்து இருக்கிறார் நடிகர் கவின். இதற்கு என்ன காரணம் என்று பார்க்கும் பொழுது வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் கவின் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து வெற்றிமாறன் மாதிரியான வித்தியாசமான இயக்குனர்களின் திரைப்படங்களில் நடிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார். தற்சமயம் கலகலப்பு 3 திரைப்படத்தில் நடித்தால் அது வெற்றிமாறனின் திரைப்படத்தில் நடிப்பதில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என நினைத்து சுந்தர் சி யின் வாய்ப்பை நிராகரித்துள்ளார் வெற்றிமாறன்.