தமிழ் நடிகர்கள் நிஜ முகம் தெரியாம பண்ணிட்டார் கிங்காங்.. செலவு பண்ணினதெல்லாம் இப்படி ஆயிடுச்சே..!
தமிழில் வெகு காலங்களாகவே துணை நடிகராக இருந்து வருபவர் நடிகர் கிங்காங். ரஜினியின் இளமை காலங்களில் துவங்கிய இப்பொழுது வரைக்கும் தமிழ் சினிமாவில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
சமீபத்தில் இவரது மகளின் திருமணத்தை மிகவும் கோலாகலமாக நடத்தினார் கிங்காங். இதற்காக தமிழில் உள்ள பல முக்கிய பிரபலங்களுக்கு பத்திரிக்கை வைத்தது மட்டுமில்லாமல் அரசியல் பிரபலங்களுக்கும் பத்திரிகை வைத்திருந்தார்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தார். இந்நிலையில் சினிமா பிரபலங்கள் யாரும் பெரிதாக இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் இது குறித்து வலைப்பேச்சு பிஸ்மி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
அவர் கூறும் பொழுது சினிமா பிரபலங்களைப் பொறுத்தவரை அவர்களது நிஜமுகம் என்ன என்று இவ்வளவு வருடம் இருந்தும் கிங் காங் கண்டறியவில்லை என்று தான் கூற வேண்டும்.
அவர்களை விட பெரிதாக இருக்கும் நபர்களுக்கு கை கொடுப்பார்கள். ஆனால் கீழே இருக்கும் எளிய மக்களுக்கு அவர்கள் கை கொடுக்க மாட்டார்கள் இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் இருந்த கிங்காங் தனக்காக தனது திருமணத்திற்கு இந்த பிரபலங்கள் எல்லாம் வந்தால் அது மரியாதையாக இருக்கும் என்று நினைத்து இருப்பார். ஆனால் அவர்கள் யாரும் அப்படி செய்யவில்லை என்று பேசியிருக்கிறார் பிஸ்மி.