நடக்க முடியாமல் நடந்து வந்து ஓட்டு போட்ட சாமி பட வில்லன் நடிகர்!.. எப்படியிருந்த மனுசன்!..

சாமி, திருப்பாச்சி போன்ற திரைப்படங்கள் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமானவர் நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ். இவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது என்றே கூறலாம். இவர் பல காலங்களாக தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார்.

சாமி திரைப்படத்தில் அவர் நடித்த பெருமாள் பிச்சை என்கிற கதாபாத்திரம் மிகவும் தனித்துவமாக இருந்தது. அதற்கு முன்பு தமிழ் சினிமாவில் நடித்த எந்த ஒரு நடிகரும் அப்படியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததில்லை என்றே கூற வேண்டும்.

மிக தாமதமாகதான் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். ஆனால் ஒரு சில திரைப்படங்களிலேயே மிகவும் பிரபலமான ஒரு நடிகராக தமிழ் சினிமா மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆனால் அதற்கு பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் போனது.

Social Media Bar

இந்த நிலையில் தற்சமயம் ஆந்திர பிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்துவரும் நிலையில் தன் சமுதாய கடமையை ஆற்றுவதற்காக ஓட்டு போட வந்திருந்தார். வயதான நிலையில் தற்சமயம் நடக்கவே கஷ்டப்படும் நிலையிலும் வாக்களிக்க வந்துள்ளார் ஸ்ரீனிவாச ராவ்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஒரு காலத்தில் எப்படி இருந்த மனுசன் இப்போது இப்படி ஆயிட்டாரே என கூறி வருகின்றனர்.