Cinema History
வீட்டு வாசலில் கதறி அழுத லிவிங்ஸ்டன்!.. கண்டுக்கொள்ளாமல் சென்ற இளையராஜா!. அடபாவமே!..
தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் பெரிய இடத்தை அடைவதற்கு வெகுவாக கஷ்டப்பட்டுள்ளனர். அப்படி கஷ்டப்பட்ட நடிகர்களில் லிவிங்ஸ்டனும் முக்கியமானவர். லிவிங்ஸ்டன் ஆரம்பத்தில் இயக்குனர் பாக்கியராஜுடம் உதவி இயக்குனராகதான் பணிப்புரிந்து வந்தார்.
அதன் பிறகு பல படங்களுக்கு திரைக்கதை எழுதி தரும் வேலையை செய்து வந்தார். இந்த நிலையில் சுந்தர புருஷன் என்கிற படத்திற்கான கதையை எழுதினார் லிவிங்க்ஸ்டன். மேலும் அந்த படத்தில் அவருக்கு கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைத்தது.
இந்த நிலையில் கதையை எழுதி முடித்த லிவிங்ஸ்டன் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்தால்தான் நன்றாக இருக்கும் என கூறிவிட்டார். தயாரிப்பாளர் குழுவும் சரி அவரை வைத்தே இசையமைத்துக்கொள்ளலாம் என கூறிவிட்டனர்.
இந்த நிலையில் இதுக்குறித்து இளையராஜாவிடம் சென்று பேசியுள்ளார் லிவிங்க்ஸ்டன். இதை கேட்டு கடுப்பான இளையராஜா, யாரை கேட்டு நீ முடிவு செய்தாய் உன் படத்திற்கு நான் இசையமைப்பேன் என்று, என கோபமாக கேட்டுள்ளார். உன் படத்திற்கு எல்லாம் என்னால் இசையமைக்க முடியாது என கூறியுள்ளார்.
அதன் பிறகு லிவிங்ஸ்டன் எவ்வளவோ அழுது கெஞ்சியும் கூட அந்த படத்திற்கு இசையமைக்க இளையராஜா ஒப்புக்கொள்ளவில்லை. இந்த நிலையில் செய்தியை கேள்விப்பட்ட தயாரிப்பாளர், விடுய்யா, உன் கதைக்குதான் படம் ஓட போகுது. இசைக்காக அல்ல எனக்கூறி அதே படத்திற்கு இசையமைப்பாளர் சிற்பியை இசையமைக்க வைத்தனர்.
இளையராஜா இசை அமைத்திருந்தால் கூட அவ்வளவு சிறப்பாக வந்திருக்குமா என சந்தேகமே.. அந்த அளவிற்கு சிறப்பான இசையை அதில் போட்டிருப்பார் சிற்பி.
