Tamil Cinema News
என்னோட அந்த பொருள்ல யார் கை வச்சாலும் கடுப்பாயிடும்.. மணிகண்டனுக்கு இருக்கும் பழக்கம்.!
தமிழ் சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்ட், திரைக்கதை எழுத்தாளர் என்று பல துறைகளில் பணிபுரிந்து தற்சமயம் வளர்ச்சி பெற்ற நடிகராக இருப்பவர் மணிகண்டன்.
கிட்டத்தட்ட மணிகண்டன் 15 வருடங்களாக தமிழ் சினிமாவில் போராடி வந்ததன் பலனாக தற்சமயம் பிரபலமான ஒரு நடிகராக மாறி இருக்கிறார். குட் நைட் திரைப்படத்திற்கு பிறகு மணிகண்டன் நடித்த குடும்பஸ்தன் திரைப்படம் தற்சமயம் அதிக வரவேற்பை பெற்று இருக்கிறது.
இந்த திரைப்படத்தை youtube குழுவான நக்கலைட்ஸ் டீம் இயக்கி இருக்கிறது இந்த படம் பெற்ற வரவேற்பை அடுத்து மணிகண்டன் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகளை பெற்று வருகிறார்.
மேலும் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவும் திட்டமிட்டு இருக்கிறார் மணிகண்டன். இந்த நிலையில் வீட்டில் தனக்கு இருக்கும் பொழுது போக்கு ஒன்றை சமீபத்தில் அவர் பகிர்ந்து இருந்தது அதிக ட்ரெண்டாகி வருகிறது.
அதில் கூறிய மணிகண்டன் எனக்கு பொம்மை கார்கள் வாங்குவது என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டில் எனது அறை முழுவதும் பொம்மை கார்களை தான் வாங்கி வைத்திருப்பேன் வீட்டிற்கு வரும் சிறுவர்கள் அதை விளையாட எடுத்து கேட்டால் கொடுக்க மாட்டேன்.
எனக்கு அப்பொழுது அதிக கோபம் வந்துவிடும் என்று கூறி இருக்கிறார் மணிகண்டன். மேலும் நமக்குள் இருக்கும் குழந்தைத்தனத்தை என்றுமே தொலைத்து விடக்கூடாது என்றும் கூறியிருக்கிறார் மணிகண்டன்.
