Cinema History
எம்.ஜி.ஆரை எல்லாம் வாத்தியார்னு சொல்லுவாங்க!.. ஆனால் எம்.ஜி.ஆரே என்னை வாத்தியார்னுதான் கூப்பிடுவாறு!.. உண்மையை கூறிய பிரபலம்!.
MGR and Vaali : சினிமாவில் ஒவ்வொரு நடிகர்களுக்கும் அடையாளமாக சில படங்கள்தான் அமைகின்றன. சிலருக்கு அவர்களது முதல் படத்தை வைத்து அவர்களின் பெயர்கள் அமையும். ஜெயம் ரவி, நிழல்கள் ரவி, யோகி பாபு போன்ற நடிகர்களுக்கு தங்களுடைய முதல் திரைப்படத்தை வைத்தே ஒரு அடையாளம் உருவானது என்று கூறலாம்.
அதே போல படத்தில் வரும் கதாபாத்திரத்தை வைத்து சிலருக்கு அடையாளங்கள் கிடைக்கின்றன. உதாரணத்திற்கு விஜயகாந்திற்கு கேப்டன் என்கிற பெயர் திரைப்படத்தில் அவர் நடித்த கதாபாரதத்தின் வழியாக வந்த பெயர்தான், அதேபோல எம்ஜிஆருக்கும் நம் நாடு திரைப்படத்திற்கு பிறகு வாத்தியார் என்கிற பெயர் பரவலாக இருந்து வந்தது.
இப்போது யாரும் அவரை வாத்தியார் என்று அழைக்காவிட்டாலும் கூட அப்பொழுதெல்லாம் திரைப்படத்திற்கு செல்லும் பொழுது வாத்தியார் திரைப்படத்திற்கு செல்கிறோம் என்று தான் கூறி வந்தனர். வாலி ஒரு சமயம் இது குறித்து ஒரு பேட்டியில் பேசும்பொழுது, அப்பொழுது தமிழ்நாடு எம்.ஜி.ஆரை வாத்தியார் என்று அழைத்து வந்தது. ஆனால் எம்.ஜி.ஆர் என்னை வாத்தியார் என்று அழைத்தார்.
எப்போதுமே பாடலாசிரியர்கள் மீது பெருமதிப்பு கொண்டவர் எம்.ஜி.ஆர். அவருக்கு அதிகமான பாடல் வரிகளை எழுதிக் கொடுத்த கவிஞர் என்றால் அது நான் தான். எனவே என்னை எப்போது பார்த்தாலும் வாங்க வாத்தியாரே என்று அழைப்பார். மொத்த தமிழ்நாடும் உங்களை வாத்தியார் என்று அழைக்கும் போது என்னை நீங்கள் வாத்தியார் என்று அழைக்கிறீர்களே என்று நான் பலமுறை இதுக்குறித்து எம்.ஜி.ஆரிடம் கடிந்து கொண்டுள்ளேன் என்று வாலி கூறி இருக்கிறார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்