Connect with us

என்னைக்குமே அவரை தலைக்குணிய விடமாட்டேன்!.. இயக்குனரை கௌரவிக்க நாகேஷ் செய்த செயல்!..

nagesh ap nagarajan

Cinema History

என்னைக்குமே அவரை தலைக்குணிய விடமாட்டேன்!.. இயக்குனரை கௌரவிக்க நாகேஷ் செய்த செயல்!..

Social Media Bar

Nagesh :ப்ளாக் அண்ட் ஒயிட் சினிமா காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் நாகேஷ். நாகேஷ் நடிப்பை பொறுத்தவரை மற்ற கலைஞர்கள் போல் அல்லாமல் வித்தியாசமான உடல் மொழியை கொண்டிருந்தார்.

அதனால்தான் எம்.ஜி.ஆர் சிவாஜி மாதிரியான பிரபலங்களே தொடர்ந்து அவர்களது திரைப்படங்களில் நாகேஷிற்கு வாய்ப்புகளை வழங்கி வந்தனர். அப்போதைய காலக்கட்டத்தில் பிரபலமாக இருந்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஏ.பி நாகராஜன்.

அவரது திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. திரைத்துறையில் அனைவரிடமும் அவர் நண்பராக இருந்து வந்தார். பெரும்பாலும் கடவுள் நம்பிக்கையுள்ள திரைப்படங்களையே எடுத்து வந்தார்.

nagesh
nagesh

இந்த நிலையில் அவரை பெருமைப்படுத்தும் விதமாக ஒரு விழா ஒன்று நடந்தது. அதில் கலந்துக்கொண்ட பிரபலங்கள் அவருக்கு மாலை அணிந்து மரியாதை செலுத்தி வந்தனர். அப்போது மாலை எடுத்து வந்த நாகேஷ் மட்டும் மாலையை அவருக்கு போடாமல் அவரது கையில் கொடுத்தார்.

ஏன் அவர் மரியாதை செய்யாமல் கையில் கொடுக்கிறார் என அனைவரும் யோசித்தப்போது நாகேஷ் பேசினார், நான் மாலை போடும்போது இயக்குனர் தலையை குணிய வேண்டி இருக்கும். எதற்காகவும் எங்கள் இயக்குனர் தலை குணிய நான் விடமாட்டேன் என கூறியுள்ளார் நாகேஷ்.

என்னதான் காமெடி நடிகராக இருந்தாலும் இந்த மாதிரியான விஷயங்களில் நுட்பமாக கவனிப்பு கொண்டவராக நாகேஷ் இருந்துள்ளார்.

To Top