Tamil Cinema News
அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட கத்தி பட வில்லன்.. அதிரடியாக நடந்த சம்பவம்.!
விஜய் நடித்த கத்தில் திரைப்படத்தில் கார்ப்பரேட் வில்லனாக நடித்தவர் நடிகர் நீல் நிதின் முகேஷ். பெரும்பாலும் நீல் நிதின் முகேஷிக்கு கார்ப்பரேட் வில்லன் கதாபாத்திரம்தான் கிடைக்கும். ஏனெனில் பார்ப்பதற்கு பணக்கார வீட்டு பையன் போலவே அவர் இருப்பார்.
இந்த நிலையில் அமெரிக்காவிற்கு செல்வது என்பது பெரிய பிரபலங்களுக்கே கடினமான விஷயமாக மாறியுள்ளது. அந்த அளவிற்கு அமெரிக்காவின் சட்டத்திட்டங்கள் இருந்து வருகின்றன.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் நீல் நிதின் முகேஷ் அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறார். படப்பிடிப்புக்காகதான் அவர் அமெரிக்கா சென்றுள்ளார், ஆனால் அங்கு நியூயார்க் விமான நிலையத்திலேயே அவரை கைது செய்துள்ளனர்.
அவரது பாஸ்போர்ட்டை பார்த்த அதிகாரிகள் அவர் பார்ப்பதற்கு இந்தியர் போல் இல்லை என முடிவு செய்துள்ளனர். இதுக்குறித்து பேசிய நீல் நிதின் முகேஷ் கூறும்போது அவர்கள் என்னை பேசவே விடவில்லை. அவர்களே ஒரு முடிவெடுத்து என்னை கைது செய்துவிட்டனர்.
பிறகு நான் என்னை பற்றி கூகுளில் பார்க்க சொன்னேன். ஆனாலும் கூட விசாரனை 4 மணி நேரம் நடந்தது. அதற்கு பிறகுதான் என்னை வெளியே விட்டனர் என கூறியுள்ளார் நீல் நிதின் முகேஷ்.
