Connect with us

ரஜினியை கலாய்த்த இயக்குனர் படத்தில் நடிக்க மாட்டேன்!… பட வாய்ப்பை நிராகரித்த ராகவா லாரன்ஸ்!.

raghava lawarance

News

ரஜினியை கலாய்த்த இயக்குனர் படத்தில் நடிக்க மாட்டேன்!… பட வாய்ப்பை நிராகரித்த ராகவா லாரன்ஸ்!.

Social Media Bar

Actor Raghava lawarance : ரஜினியை தனது குருவாக ஏற்றுக் கொண்டு தமிழ் சினிமாவில் நடிகராக நடிக்க துவங்கியவர் நடிகர் லாரன்ஸ். ஏனெனில் ராகவா லாரன்ஸ் சினிமாவில் நடன கலைஞர் ஆவதற்கான வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தவரே நடிகர் ரஜினிகாந்த் தான் என்று கூறப்படுகிறது.

அதற்கு முன்பு வரை அங்கு எடுபுடி வேலைகள்தான் பார்த்து வந்தார். அவரது திறமைகளை கண்டு கொண்ட ரஜினிகாந்த் அவருக்கு அங்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தார் என்று கூறப்படுகிறது. எனவேதான் ராகவா லாரன்ஸ் ரஜினிகாந்தின் மிகப்பெரும் ரசிகராக இருந்தவர்.

raghava-lawarance
raghava-lawarance

ரஜினிகாந்துடன் இணைந்து ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்பது ராகவா லாரன்ஸின் பெரும் ஆசையாகும். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜின் நண்பரும் அவரது உதவி இயக்குனருமான ரத்னகுமார் ஒரு திரைப்படம் இயக்கவிருக்கிறார் .

அந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென ராகவா லாரன்ஸ் அந்த திரைப்படத்திலிருந்து விலகிவிட்டார். இது குறித்து வலைப்பேச்சு பிஸ்மி கூறும் பொழுது லியோ திரைப்படத்தின் வெற்றி விழா நடந்த பொழுது அதில் ரஜினியை விமர்சிக்கும் வகையில் சில விஷயங்களை ரத்னகுமார் பேசியிருந்தார்.

ரஜினியின் மிகப்பெரிய ரசிகராக இருக்கும் பொழுது இந்த விஷயத்தை எப்படி அவரால் பொறுத்துக் கொள்ள முடியும். எனவே இனிமையான திரைப்படத்தில் நடிக்க கூடாது என்று முடிவு செய்துவிட்டார் ராகவா லாரன்ஸ் என்று இது குறித்து விளக்கம் கொடுத்திருந்தார் பத்திரிகையாளர் வலைப்பேச்சு பிஸ்மி.

Articles

parle g
madampatty rangaraj
To Top