Cinema History
சினிமாவை வேடிக்கை பார்க்க வர்றவங்களுக்கும் அதை செய்யணும்!.. விஜயகாந்தை தாண்டி ராஜ்கிரண் செய்த சம்பவம்!.. என்ன மனுசன்யா!..
Rajkiran and Vijayakanth: 1990களில் தமிழ் சினிமாவில் பெரும் வளர்ச்சியை உருவாக்கியது கிராமபுரத்தில் இருந்து வந்த சாதாரண மனிதர்கள்தான். அந்த காலகட்டத்தில் சினிமாவின் மீது மோகம் கொண்டு எக்கச்சக்கமான இளைஞர்கள் வாய்ப்பை தேடி சென்னைக்கு வந்தனர்.
அப்படி வாய்ப்பு தேடி வந்து சினிமாவில் வாய்ப்புகளை பெற்றவர்கள்தான் பிறகு சினிமாவை கட்டமைத்தனர். என்று கூறலாம். பாரதிராஜா, பாக்யராஜ், வைரமுத்து, இளையராஜா இப்படியான இந்த வரிசையில் நடிகர் ராஜ்கிரணும் ஒருவர்.

இவர்கள் எல்லாம் சின்ன கிராமத்தில் வறுமையான குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்து பிறகு பெரும் உச்சத்தை தொட்டவர்கள். இவர்கள் எல்லோருடைய கதைகளும் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு ஒரே மாதிரிதான் இருக்கும்.
சாப்பாட்டிற்கே வழியில்லாமல் சினிமாவில் வாய்ப்பு தேடி இருப்பார்கள். அதனால்தான் நடிகர் விஜயகாந்த் கூட சினிமாவிற்கு வந்த பிறகு சாப்பாடு விஷயத்தில் முக்கியத்துவம் கொடுத்தார். அதேபோல ராஜ்கிரனும் ஒரு விஷயத்தை செய்திருக்கிறார். அவர் அதை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த பிறகு வெகு நாட்களுக்கு பிறகு ஒரு ப்ரொடக்ஷன் நிறுவனத்தில் ஒரு நாளைக்கு நான்கு ரூபாய் சம்பளத்தில் ராஜ்கிரனுக்கு ஒரு வேலை கிடைத்தது.
ராஜ்கிரண் செய்த உதவி:
அப்போது பணத்திற்கு மிகவும் கஷ்டம் என்பதால் சேமித்து வைத்து சாப்பாட்டிற்கு குறைவாக செலவு செய்து வாழ்ந்து வந்தார் ராஜ்கிரண். அதன் பிறகு நல்ல உயரத்தை அடைந்த ராஜ்கிண் சாப்பாட்டு விஷயத்தில் மட்டும் மக்களுக்கு குறை வைக்க கூடாது என முடிவு செய்து இருந்தார்.

இந்த நிலையில் ராஜ்கிரண் தயாரிப்பில் படங்கள் தயாரான பொழுது அந்த திரைப்படங்கள் அதிகபட்சம் கிராமப்புறங்களில்தான் படமாக்கப்பட்டன அப்பொழுது படவேலை பார்ப்பவர்கள் 200 பேர் இருந்தால் 300 பேருக்கு சேர்த்து சமைக்க சொல்லுவார் ராஜ்கிரண்.
ஏன் இப்படி சமைக்க சொல்கிறார் என பார்க்கும்பொழுது அந்த கிராமங்களில் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வருபவர்களுக்கும் சாப்பாடு போடுவாராம் ராஜ்கிரண். விஜயகாந்த் படக்குழுவில் வேலை பார்ப்பவர்களுக்கு சாப்பாடு போட்டால் அதையும் மிஞ்சி ராஜ்கிரண் படத்தை வேடிக்கை பார்க்க வருபவர்களுக்கு கூட உணவளித்திருக்கிறார்.
