OTT
ஜெய்பீம் மாதிரி கதை அமைப்பில் களம் இறங்கிய பருத்திவீரன் சரவணன்… சட்டமும் நீதியும் ட்ரைலர்..!
தமிழில் அஜித் விஜய் காலகட்டங்களில் இருந்து கதாநாயகனாக நடித்து வந்தவர் நடிகர் சரவணன்.
ஆனால் ஒரு காலகட்டத்திற்கு பிறகு அவருக்கு மார்க்கெட் என்பது குறைந்துவிட்டது. கமர்சியல் திரைப்படங்களை காட்டிலும் குடும்ப திரைப்படங்கள் மீது அவர் அதிக ஈடுபாடு காட்டியதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சரவணன் பருத்திவீரன் திரைப்படம் மூலமாக மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்தார். சித்தப்பு என்கிற அவருடைய கதாபாத்திரம் அதிகமாக பேசப்பட்டது. அதனை தொடர்ந்து நிறைய வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார் சரவணன்.
இந்த நிலையில் தற்சமயம் அவர் நடித்து வரும் வெப் சீரிஸ் ஒன்று அதிக வரவேற்பு பெற துவங்கி இருக்கிறது. சட்டமும் நீதியும் என்கிற ஜீ5 வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கிறார் சரவணன்.
இந்த வெப் சீரிஸை பாலாஜி செல்வராஜ் என்பவர் இயக்குகிறார். நீதிமன்றத்தில் சின்ன வேலைகளை பார்த்து வரும் ஒரு வழக்கறிஞராக இருந்து வருகிறார் சரவணன். இந்த நிலையில் ஒரு நபர் தீக்குளித்து இறந்து விடவே அந்த வழக்கை கையில் எடுக்கிறார் சரவணன்.
அதில் அவர் வெற்றி பெறுகிறாரா? இல்லையா? என்பதாக கதை செல்கிறது ஏற்கனவே ஹாட்ஸ்டாரில் வெளியாகி வரும் கிரிமினல் ஜஸ்டிஸ் என்கிற தொடருக்கு இணையான ஒரு தொடராக இது இருக்கிறது. எப்படியும் இது சரவணனுக்கு வரவேற்பை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
