அற்புதமான ரெண்டு படத்தை விட்டுட்டாரு!.. தலையில் மண்ணை வாரி போட்டுக்கொண்ட நடிகர் ஷாம்!.

நடிகர்கள் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்கள்தான் அவர்கள் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்ள உதவுகிறது. தவறான திரைப்படங்களை தேர்ந்தெடுக்கும் நடிகர்கள் தொடர்ந்து தோல்வியை காண்பதற்கும் வாய்ப்புண்டு.

நடிகர் அப்பாஸ் கூட படம் தேர்ந்தெடுப்பதில் கோட்டை விட்டதன் காரணமாகதான் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை இழந்தார். அதே தவறைதான் நடிகர் ஷாமும் செய்திருக்கிறார். ஷாம் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக இருந்தார்.

அவர் நடித்த லேசா லேசா, இயற்கை மாதிரியான காதல் திரைப்படங்களுக்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் இருந்தன. அவரும் பார்ப்பதற்கு சாக்லேட் பாய் மாதிரி இருந்ததால் பெண்கள் விரும்பும் கதாநாயகனாக இருந்து வந்தார் ஷாம்.

Social Media Bar

இந்த நிலையில் அவரை வைத்து பார்த்திபன் கனவு திரைப்படத்தை இயக்குவதற்கு ஆசைப்பட்டார் இயக்குனர் கரு.பழனியப்பன். ஆனால் அந்த படத்தில் நடிக்க விருப்பமில்லை என கூறிவிட்டார் ஷாம். அதற்கு பிறகு இயக்குனர் ஹரி சாமி திரைப்படத்தின் கதையை கூறினார். அதையும் மறுத்துவிட்டார் ஷாம்.

இந்த இரண்டு திரைப்படங்களுமே அதற்கு பிறகு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதே சமயத்தில் ஷாம் நடித்த பாலா என்கிற திரைப்படம் தோல்வியை கண்டது. எனவே நடிகர்கள் தேர்ந்தெடுக்கும் படங்கள்தான் அவர்கள் சினிமா வாழ்க்கையை தீர்மானிக்கின்றன என்பதற்கு இது பெரிய உதாரணம்.