நிறைய ஆட்டம் போட்டுட்டு இருந்தான்!.. இப்ப அமுக்கி உக்கார வச்சிட்டாங்க!.. ஆர்யா குறித்து பேசிய சந்தானம்!..

Actor Santhanam: சின்ன திரையில் நகைச்சுவை கலைஞராக இருந்து அதன் மூலமாக தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்றவர் நடிகர் சந்தானம். ஆரம்பத்தில் சந்தானத்திற்கு தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் என்பது இல்லாமல்தான் இருந்தது.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவரது நகைச்சுவைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரிக்க துவங்கியது. இதனை தொடர்ந்து அஜித், ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க துவங்கினார். மேலும் இயக்குனர் ராஜேஷ் இயக்கும் காமெடி திரைப்படங்களில் சந்தானத்திற்குதான் முக்கியமான கதாபாத்திரம் வழங்கப்பட்டது.

அவர் இயக்கத்தில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி போன்ற திரைப்படங்கள் சந்தானத்திற்கு முக்கியமானவை. தற்சமயம் சந்தானம் ஹீரோவாக நடிக்க துவங்கிவிட்டார். அவரது படங்களில் ஒரு சில படங்கள் நல்ல வெற்றியை பெறுகின்றன.

Santhanam
Santhanam
Social Media Bar

ஒரு சில தோல்வியடைகின்றன. ஆனால் காமெடி நடிகராக இருந்தப்போதே உதயநிதியில் துவங்கி பல நடிகர்களுடன் நெருக்கமானார் சந்தானம். இதனால் அவரது சினிமா வட்டாரம் என்பது கொஞ்சம் பெரிது என்றே கூறலாம். அதே போல நடிகர் ஆர்யாவும் சந்தானமும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

சந்தானம் ஆர்யா குறித்து ஒரு பேட்டியில் கூறும்போது கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி நல்லா ஆட்டம் போட்டுட்டு இருந்தான். ஆனால் கல்யாணத்துக்கு பிறகு இப்போ எப்ப போன் பண்ணுனாலும் குழந்தைக்கு பேம்பர்ஸ் மாத்துறேன், பால் ஊட்டி விடுறேன்னு ஏதாவது சொல்லிட்டு இருக்கான். ஒரு நாளைக்கு ஒரு மூன்று முறையாவது ஆர்யாவுக்கு போன் செய்துவிடுவேன் என்கிறார் சந்தானம்.