Connect with us

இப்படி கதறவிட்டுட்டீங்களே பாஸ்!.. இயக்குனர் செயலால் மாஸ் படத்தில் வாய்ப்பை இழந்த சித்தார்த்!..

siddharth 1

Cinema History

இப்படி கதறவிட்டுட்டீங்களே பாஸ்!.. இயக்குனர் செயலால் மாஸ் படத்தில் வாய்ப்பை இழந்த சித்தார்த்!..

Social Media Bar

Actor Siddharth: இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த சித்தார்த் பாய்ஸ் திரைப்படம் மூலமாக தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார். தனது முதல் திரைப்படம் பெரிய இயக்குனர் திரைப்படமாக இருக்க வேண்டும் என்று காத்திருந்த சித்தார்த்திற்கு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் ஷங்கர் இயக்கிய திரைப்படத்திலேயே தோல்வியை கண்ட திரைப்படம் என்றால் அது பாய்ஸ் திரைப்படம்தான். அதற்குப் பிறகும் கூட சித்தார்த்தத்திற்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து தமிழில் முக்கியத்துவம் பெற்ற ஒரு நடிகராக சித்தார்த் இருந்து வருகிறார்.

siddharth
siddharth

சித்தார்த்தை பொறுத்தவரை கிடைக்கும் படங்களில் எல்லாம் அவர் நடிப்பது கிடையாது. ஆரம்பத்தில் தெலுங்கு தமிழ் என்று எல்லா சினிமாக்களிலும் ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் போகப் போக கதைக்கும் முக்கியத்துவம் கொடுக்க தொடங்கினார் சித்தார்த்.

அதனை தொடர்ந்து நல்ல கதைகள் கிடைத்தால் மட்டுமே அதில் நடிப்பது என்று இருந்து வருகிறார். அவர் நடித்த சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்குப் பிறகு சித்தா திரைப்படமும் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பை பெற்றது.

வாய்ப்பை இழந்த சித்தார்த்:

இந்த நிலையில் ஒரு பேட்டியில் கூறும் பொழுது இயக்குனர் சசி குறித்து ஒரு செய்தியை கூறியிருந்தார் சித்தார்த். பிச்சைக்காரன் திரைப்படத்தின் கதையை முதலில் சசி சித்தார்த்திடம்தான் கூறியிருக்கிறார். ஆனால் படத்தின் மொத்த கதையும் கூறாமல் ஒரு சின்ன பகுதியை மட்டும் சித்தார்த்திடம் கூறியிருக்கிறார்.

pichaikaaran
pichaikaaran

அதனை கேட்ட பொழுது சித்தார்த்திற்கு பெரிதாக அதைப் பற்றி புரிதல் இல்லாததால் அந்த கதைக்கு அவர் ஆர்வம் காட்டவில்லை. பிறகுதான் அந்த படத்தை விஜய் ஆண்டனியை வைத்து எடுத்து இருக்கிறார் சசி. அந்த படம் வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்தபோது அதை திரையரங்குகளில் பார்த்த சித்தார்த் ஒருவேளை நமக்கு சொன்ன கதைதான் இந்த படமாக இருக்குமோ என்று ஒரு சந்தேகத்தில் இயக்குனரிடம் கேட்டிருக்கிறார்.

உடனே இயக்குனர் சசி ஆமாம் உன்னிடம் சொன்ன கதைதான் நீ நடிக்கவில்லை என்று விட்டாய். அதனால் விஜய் ஆண்டனியை வைத்து எடுத்தேன் என்று கூறவும் மன உளைச்சலுக்கு உள்ளாகி விட்டாராம் சித்தார்த். இதனை அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

To Top