Connect with us

சிம்புவோட என்ன பஞ்சாயத்து!.. படத்தை விட்டு விலகிய ஜெயம் ரவி!.. இதுதான் காரணமாம்!..

simbu jayam ravi

News

சிம்புவோட என்ன பஞ்சாயத்து!.. படத்தை விட்டு விலகிய ஜெயம் ரவி!.. இதுதான் காரணமாம்!..

Social Media Bar

மாநாடு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சிம்புவின் மார்கெட் என்பது தமிழ் சினிமாவில் அதிகரித்துள்ளது. சிம்புவை பொறுத்தவரை பொதுவாகவே அவர் ஒழுங்காக நடிக்க வரமாட்டார். சரியான சமயத்தில் படப்பிடிப்புக்கு வர மாட்டார் என்று அவர் மீது அதிக குற்றச்சாட்டுக்கள் உண்டு.

இந்த நிலையில் மாநாடு திரைப்படத்திற்கு பிறகு நடிப்பின் மீது அதிக கவனம் செலுத்த துவங்கியுள்ளார் சிம்பு. படங்களுக்காக உடல் எடையை அதிகரிப்பது குறைப்பது போன்ற விஷயங்களை செய்து வருகிறார். இந்த நிலையில் ஜெயம் ரவிக்கும் சிம்புவிற்கும் தனிப்பட்ட பஞ்சாயத்து இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

jayam-ravi
jayam-ravi

சமீபத்தில் ஜெயம் ரவி நடித்த எந்த படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. தொடர்ந்து அவரது திரைப்படங்கள் தோல்வியை கொடுத்து வருகின்றன. இதற்கு நடுவே பொன்னியின் செல்வன் திரைப்படம் மட்டும் நல்ல வெற்றியை கொடுத்தது.

எனவே அடுத்தும் மணிரத்தினம் இயக்கத்திலேயே திரைப்படம் நடிக்கலாம் என முடிவு செய்த ஜெயம் ரவி தக் லைஃப் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். ஆனால் தற்சமயம் அந்த படத்தில் இருந்து விலகியிருக்கிறார் ஜெயம் ரவி.

என்ன காரணம் என பார்க்கும்போது அந்த படத்தில் சிம்பு கமிட் ஆனதுதான் ஜெயம் ரவி விலகியதற்கு காரணம் என பேச்சுக்கள் இருக்கின்றன. இவர்கள் இருவருக்குமிடையே என்ன பிரச்சனை என தெரியவில்லை. இதன் காரணமாக இருவரும் சேர்ந்து நடிப்பதற்கு உடன்படுவதே கிடையாதாம்.

To Top