சிவகார்த்திகேயன் படத்தில் நான் பட்ட அவமானம்.. வெளிப்படையாக கூறிய சூரி.!
ஆரம்பத்தில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்சமயம் தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வருபவர் நடிகர் சூரி. சூரி நடிக்கும் திரைப்படங்களுக்கு தொடர்ந்து வரவேற்பு என்பது இருந்து வருகிறது.
ஏனெனில் ஒவ்வொரு முறையும் நடிகர் சூரியே வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சூரியின் நடிப்பில் மாமன் என்கிற திரைப்படம் வெளியானது.
இந்த நிலையில் இடையில் ஒரு விழாவில் பேசிய சூரி கூறும் பொழுது சீம ராஜா திரைப்படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்தது குறித்து பேசி இருந்தார். அதில் சூரி கூறும் பொழுது படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு சிக்ஸ் பேக் காட்சிகளுக்காக நடித்தேன்.

பிறகு அந்த படம் வெளியான பொழுது எனது மகனை அழைத்துக்கொண்டு படத்திற்கு சென்றேன். படத்தில் சரியாக சிக்ஸ் பேக் காட்சி வரும் பொழுது அவன் பாப்கானை தேடிக்கொண்டு கீழே குனிந்து விட்டான்.
அவன் நிமிர்வதற்குள் அந்த காட்சியே முடிந்து விட்டது. எனவே அந்த படத்தில் மொத்தமே 50 நொடிகள் தான் அந்த காட்சிகள் இருந்தது என்று அந்த நிகழ்வை பகிர்ந்திருக்கிறார் சூரி.