News
படத்துல காம்ப்ரமைஸே கிடையாது!.. முதல்ல இருந்து எடுங்க!.. தயாரிப்பு நிறுவனத்திற்கு அதிர்ச்சி கொடுத்த சூர்யா!..
Actor Surya : தமிழ் சினிமாவில் எப்போதுமே பெரும் பட்ஜெட் திரைப்படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகமாகவே இருந்து வருகிறது. திரைப்படம் எடுக்கப்படும் பொழுது அது சாதாரண பட்ஜெட் திரைப்படமாக இருந்தால் மக்கள் மத்தியில் அது குறித்து பெரிய எதிர்பார்ப்பு இருக்காது.
ஆனால் அந்த திரைப்படம் பெரும் பட்ஜெட் திரைப்படமாக இருக்கும் பட்சத்தில் அதற்கு வரவேற்பு என்பது அதிகமாகவே இருக்கும். பாகுபலி எந்திரன் மாதிரியான திரைப்படங்கள் அப்படி பட்ஜெட் காரணமாக வரவேற்பை பெற்ற திரைப்படங்கள்தான்.

அப்படியாக தற்சமயம் சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படம் அதன் பட்ஜெட் காரணமாகவே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் அரச காலத்தில் நடக்கும் கதை என்று கூறப்படுகிறது. இந்த படம் தொடர்பாக வெளியாகும் போஸ்டர்கள், டீசர்கள் என அனைத்துமே அதிக வரவேற்பை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.
சொல்லப்போனால் இயக்குனர் சிறுத்தை சிவாவிற்கு அவரது சினிமா வாழ்க்கையில் முக்கியமான திரைப்படமாக கங்குவா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தை தயாரிக்கும் ஞானவேல் ராஜாவிற்கும் இந்த திரைப்படம் முக்கியமான திரைப்படம் ஆக இருக்கும்.
அதிருப்தியில் சூர்யா:
பெரும் பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு வேலைகள் முடிந்து விட்டன. பாதிக்கு மேல் படத்திற்கு கிராபிக்ஸ் வேலைகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் இதுவரை முடிக்கப்பட்டுள்ள வேலைகளை பார்த்த சூர்யா மிகவும் மிரண்டு போய் உள்ளதாக கூறப்படுகிறது.
அவருக்கு இந்த படம் மிகவும் பிடித்து விட்டதாக பேச்சுக்கள் இருக்கின்றன. ஆனால் அந்த படத்தில் ஒரே ஒரு குறை மட்டும் சூர்யாவிற்கு நெருடலாக இருந்துள்ளது. அது என்னவென்றால் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளைப் பொறுத்தவரை தமிழ்நாடு இன்னமும் ஹாலிவுட் அளவிற்கு முன்னேறவில்லை.

இந்த நிலையில் இந்த படத்திலும் கிராபிக்ஸ் காட்சிகள் அவ்வளவு நேர்த்தியாக இல்லை என்று சூர்யாவிற்கு தோன்றியதால் மீண்டும் முதலில் இருந்து கிராபிக்ஸ் வேலைகளை தொடங்க வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் கூறிவிட்டார்.
இதற்கு அதிக செலவாகும் என்பதால் கொஞ்சம் அதிர்ச்சியில் இருக்கிறார் தயாரிப்பாளர். ஆனால் படம் வெளியானால் இந்த கிராபிக்ஸ் காட்சிகளால் படம் விமர்சனத்திற்கு உள்ளாகும் என்று சூர்யா கூறியதால் திரும்பவும் கிராபிக்ஸ் வேலைகளை மேம்படுத்த துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
