Connect with us

11 வருடமாக வெற்றி படமே இல்லை.. சூர்யா நடிப்பில் கடைசி வெற்றி படம் எது தெரியுமா?

surya

Tamil Cinema News

11 வருடமாக வெற்றி படமே இல்லை.. சூர்யா நடிப்பில் கடைசி வெற்றி படம் எது தெரியுமா?

Social Media Bar

ஒரு காலகட்டத்தில் நடிகர் அஜித் விஜய் ஆகிய இருவருக்குமே போட்டி நடிகராக இருந்தவர் நடிகர் சூர்யா. இப்பொழுதும் கூட கேரளாவில் சூர்யாவிற்கு பிறகு விஜய்க்கு பிறகு அதிகமாக ரசிகர்களை சூர்யாதான் பெற்றிருக்கிறார்.

அந்த அளவிற்கு பிரபலமான நடிகராக இருந்தவர் சூர்யா. ஆனால் அதற்குப் பிறகு சண்டை காட்சிகள் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு கிடைக்க துவங்கியது. அந்த சமயத்திலும் சூர்யா ஆக்ஷன் படங்களாக தொடர்ந்து நடிக்காமல் வெவ்வேறு கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

இதனாலேயே அவருக்கு மார்க்கெட் குறைய துவங்கியது. ஆனால் இப்பொழுதும் சூர்யா நடிக்கும் ஆக்ஷன் திரைப்படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகமாகதான் இருந்து வருகிறது. இந்த நிலையில் வெகு வருடங்களாகவே ஒரு பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றி என்பது சூர்யாவிற்கு இல்லாமல் இருந்து வருகிறது.

surya

surya

சூர்யா வெற்றி திரைப்படம்:

கடைசியாக இயக்குனர் ஹரி இயக்கிய சிங்கம் 3 திரைப்படம்தான் சூர்யாவிற்கு பெரும் வெற்றி படமாக அமைந்தது. அதற்கு பிறகு சூர்யா நடித்த படங்கள் எதுவுமே அவருக்கு பெரிய வெற்றியை பெற்று தரவில்லை. இடையில் அவர் நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படங்களாக சூரரை போட்டு மற்றும் ஜெய் பீம் ஆகிய இரண்டு திரைப்படங்கள் இருந்தன.

ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களுமே திரையரங்குகளில் வெளியாகவில்லை ஓ.டி.டியில்தான் வெளியானது. அதனால் இந்த படமும் அவரது வெற்றி படங்களின் கணக்கில் வரவில்லை. எனவே கிட்டத்தட்ட 11 வருடங்களாக வெற்றி படங்களே இல்லாமல் இருந்து வருகிறார் சூர்யா.

ஒருவேளை கங்குவா திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்திருந்தார் அந்த படம் அவரது வெற்றி படமாக அமைந்திருக்கும். ஆனால் அதற்கும் இப்பொழுது வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

To Top