Tamil Cinema News
சிம்பு,விஷால்,தனுஷ் மூன்று பேருக்கும் எதிராக திரும்பிய தயாரிப்பாளர் சங்கம்.. இனி அடுத்து படம் பண்ண முடியாது..!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களாக இருந்து தற்பொழுது முன்னணி நடிகர்களாக மாறியிருப்பவர்கள் சிம்பு மற்றும் தனுஷ். ஆனால் தொடர்ந்து அவர்களால் சினிமாவில் சர்ச்சைகள் என்பது இருந்து கொண்டே தான் இருக்கிறது.
அதிலும் தனுஷை விட சிம்பு அதிக விமர்சனத்திற்கு உள்ளான ஒரு நடிகர் ஆவார். ஆரம்ப காலகட்டங்களில் சினிமாவில் படங்களுக்கு ஒழுங்காக நடிக்க கூட வரமாட்டார் சிம்பு என்று அவர் மீது குற்றச்சாட்டு இருந்தது. அந்த அளவிற்கு மோசமாக இருந்தார் சிம்பு.
அதன் பிறகு அவருக்கும் சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் போன தருணம் உருவானது. அப்பொழுதுதான் சினிமாவை புரிந்து கொண்டார் சிம்பு. இந்த நிலையில் இப்பொழுது படப்பிடிப்புகளுக்கு ஒழுங்காக வந்து நடித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
சிம்பு தனுஷிற்கு வந்த பிரச்சனை:
சிம்பு தனுஷை பொருத்தவரை தனுஷ் நடிப்பதை பொறுத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இவர்கள் இருவருமே தயாரிப்பாளர்களிடம் நிறைய பிரச்சனைகளை செய்வதாக கூறப்படுகிறது. முக்கியமாக நிறைய திரைப்படங்களில் நடிப்பதாக அட்வான்ஸ் தொகைகளை வாங்கிக்கொண்டு அதற்குப் பிறகு நடிக்காமல் இழுத்து அடித்து வருகின்றனர்.
அந்த வகையில் தனுஷ் நிறைய திரைப்படங்களில் கமிட்டாகி இன்னமும் நடிக்காமல் இருக்கிறார். இதனை அடுத்து தயாரிப்பாளர் சங்கம் இது குறித்து ஏற்கனவே பிரச்சனை செய்திருந்தது. ஆனாலும் தனுஷ் கமிட்டான திரைப்படங்களில் நடிக்காமல் மீண்டும் மீண்டும் புதிய படங்களில் கமிட் ஆகி வருகிறார்.
இந்த நிலையில் அவருடைய 55 வது திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருந்தார் தனுஷ். இந்த நிலையில் தற்சமயம் அவருக்கு ரெட் கார்ட் அறிவித்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம். அதன்படி தனுஷ் ஏற்கனவே அட்வான்ஸ் வாங்கிய திரைப்படங்களில் நடித்து முடித்துவிட்டுதான் ராஜ்குமார் பெரியசாமி திரைப்படத்தில் நடிக்க வேண்டும்.
அதேபோல சிம்பு மற்றும் விஷால் ஆகிய நடிகர்களும் ஏற்கனவே இருக்கும் கமிட்மெண்டுகளை முடித்துவிட்டுதான் புது திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றனர் சங்கத்தினர்.