Cinema History
அன்னிக்கு கலைஞருக்காக 10 லட்சம் செலவு செய்தார் கேப்டன்… ஆனால் அவருக்கு பதிலுக்கு என்ன செஞ்சீங்க!.. நேரடியாக கேட்ட தியாகு!..
Captain Vijayakanth: மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்த் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு ஆரம்பக்கட்டத்தில் அதிக வரவேற்பு இருந்து வந்தது.
அரசியலுக்கு வருவதற்கு முன்பு வரை கேப்டன் விஜயகாந்த் குறித்து தமிழ் மக்கள் மத்தியில் நல்ல விதமான அபிப்ராயங்களே இருந்தன. ஆனால் அரசியலுக்கு வந்த பிறகு அவரை அதிக கேலிக்கு உள்ளாக்கின அப்போது இருந்த பத்திரிக்கைகள். இது திட்டமிட்ட நிகழ்த்தப்பட்டது என்றும் பேச்சுக்கள் உண்டு.
அதனை தொடர்ந்து அவருக்கு அரசியல் எதிரிகளும் உண்டாகினர். இதுக்குறித்து விஜயகாந்தின் நண்பரான தியாகு கூறும்போது, திரைத்துறையில் அனைவரும் சேர்ந்து கலைஞர் கருணாநிதிக்கு பொன்விழா எடுக்க முடிவு செய்தோம்.
அப்போது ஜெயலலிதா ஆட்சியில் இருந்த காரணத்தால் பலரும் கருணாநிதிக்கு பொன்விழா எடுப்பதற்கு பயந்தனர். ஆனால் விஜயகாந்த் எதை குறித்தும் பயப்படவில்லை. இத்தனைக்கும் பல பிரபலங்களே அந்த பொன் விழா நிகழ்ச்சிக்கு வரவில்லை, மனோரமா கூட விழாவுக்கு வந்தால் அம்மு கோவிச்சுக்கொள்ளும் என கூறி அந்த விழாவை நிராகரித்துவிட்டார்.
அப்படியிருந்தும் கூட விஜயகாந்த் விடுவதாய் இல்லை. லட்சக்கணக்கான மக்களை கூட்டி கலைஞருக்கு பொன் விழா நடத்தினார். மேலும் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க பேனாவையும் அவருக்கு பரிசளித்தார். அப்படியெல்லாம் கேப்டன் செய்தும் பதிலுக்கு அவருக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை.
மாறாக பாலம் கட்ட வேண்டும் என கூறி அவரது இடத்தை ஆக்கிரமித்து அந்த மண்டபத்தையும் இடித்தீர்களே என நேரடியாக கேட்கிறார் தியாகு,
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்