20 வருஷம் முன்னாடியே அதை செஞ்சுருப்பேன்.. விஜய் அரசியலுக்கு வர்றதுக்கு முக்கிய காரணமே இதுதான்..! ஆளுங்கட்சியை சாடிய தளபதி..!

நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறார் என்றதுமே அவரை மாஸ் ஹீரோவாக பார்த்து வந்த ரசிகர்கள் தற்சமயம் அவரை தலைவராக பார்க்க துவங்கியுள்ளனர். விஜய்க்கு வெகு காலங்களாகவே அரசியலுக்கு வர வேண்டும் என்கிற ஆசை இருந்து வந்தது.

அதனை தொடர்ந்துதான் தற்சமயம் அரசியல் கட்சி ஒன்றை துவங்கியுள்ளார். திரைத்துறையினரை பொறுத்தவரை அவரது அரசியல் நுழைவுக்கு பலரும் விருப்பம் தெரிவித்தே வருகின்றனர். ஆனால் அதற்காக சினிமாவை விட்டு சென்றிருக்க வேண்டாம் என்பதுதான் பலரது கருத்தாக இருந்தது.

விஜய் அரசியல்:

Social Media Bar

ஏற்கனவே நிறைய திரைப்படங்களில் அரசியல் பேசி இருக்கிறார் விஜய். அதற்காக அவரது அலுவலகத்தில் ரெய்டு மாதிரியான விஷயங்களும் நடந்தன. திரைப்படங்களில் கொஞ்சமாக அரசியல் பேசியதற்கே இவ்வளவு பின் விளைவுகள் ஏற்படுகிறதே என அப்போதே அதுக்குறித்து யோசித்துள்ளார் விஜய்.

அதன் காரணமாகதான் அவர் அரசியலுக்குள் எண்ட்ரி ஆனார் என்று முன்பே ஒரு பேச்சு இருந்தது. அதற்கு தகுந்தாற் போலவே ஒரு விடையையும் கொடுத்துள்ளார் தளபதி. தளபதி விஜய்யிடம் ஒரு பேட்டியில் 20 வருடத்திற்கு முன்பு இருந்த விஜய்யிடம் சென்று ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்றால் என்ன சொல்வீர்கள் என கேட்கப்பட்டது.

இதுதான் காரணம்:

vijay bussy anand
vijay bussy anand

அதற்கு பதிலளித்த விஜய் அந்த விஜய்யிடம் சென்று உன் வாழ்க்கை என்னுடையதை விட நிம்மதியாக இருக்கிறது. ஏனெனில் அப்போதெல்லாம் எந்த ரெய்டும் இல்லை என வெளிப்படையாக கூறியுள்ளார் விஜய்.

விஜய் அப்படி கூறியதன் மூலமாக அரசியல் வாதிகள் கொடுத்த அழுத்தம்தான் அவரை தொடர்ந்து தற்சமயம் அரசியலுக்கு வரவழைத்துள்ளது என தெரிகிறது.