Latest News
குழந்தைகளை வளர்க்க விஜய் சேதுபதிக்கிட்ட கத்துக்கணும்.. பெத்தவங்க இதெல்லாம் குழந்தைகளுக்கு பண்றதே இல்லை..!
தற்போது தமிழ் மக்களுக்கு பிடித்த நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. மேலும் மக்கள் செல்வன் என்றும், இவரின் ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகிறார்கள். பல நிகழ்ச்சிகளில் மேடைகளில் இவர் பேசும் கருத்துகள் ரசிகர்களுக்கு பிடித்துப் போக அதனை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருவதும் வழக்கமான ஒன்று.
தற்போது எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை மறுக்காமல் பயன்படுத்தி மக்களிடையே பிரபலமடைந்து வருகிறார்.
தற்போது விஜய் சேதுபதி முடி வெட்ட சென்ற கடையில் நடந்த நிகழ்வு ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த விஜய் சேதுபதியின் ரசிகர்களும் மக்களும் அவர்களின் கருத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
நடிகர் விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளராக இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பணியாற்றி வருகிறார். இதுவரை 50 திரைப்படங்களில் அவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தேசிய திரைப்பட விருது உட்பட தென்னிந்திய ஃபில் ஃபேர் விருதுகள் மற்றும் இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை பெற்றிருக்கிறார்.
துபாயில் வேலை செய்து வந்த விஜய் சேதுபதி, சினிமாவில் பின்னணி நடிகராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார். அதன் பிறகு சுந்தரபாண்டியன், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு இடையே பிரபலமானார்.
சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பண்ணையாரும் பத்மினியும், காதலும் கடந்து போ, இறைவி, விக்ரம் வேதா, செக்க சிவந்த வானம், பேட்டை, மாஸ்டர், விக்ரம், ஜவான், மகாராஜா, சூப்பர் டீலக்ஸ் போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மக்கள் செல்வனாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.
கதாநாயகனாக மட்டுமல்லாமல் பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் வில்லனாகவும் நடித்து வருகிறார்.
சிறுவனிடம் பேசிய விஜய் சேதுபதி
சமீபத்தில் முடி வெட்டுவதற்காக விஜய் சேதுபதி ஒரு கடைக்கு சென்று இருக்கிறார். அந்த கடையில் ஒரு சிறுவனை சந்தித்து பேசி இருக்கிறார் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அந்த சிறுவனுடன் அவர் பேசும் பொழுது அவரும் குழந்தையாக மாறி பேசியிருக்கிறார். மேலும் அந்த சிறுவன் பேசும்போது தன்னைவிட தன் பாட்டிக்கு வயது குறைவு என கூறினான். அதைக் கேட்டு அவரது தாயார் சிரித்தார். உடனே அவரிடம் சிரிக்க கூடாது என விஜய் சேதுபதி கூறினார் .
குழந்தைகள் எதைப் பேசினாலும் நம் சிரித்து அவர்களை கேலி செய்யக்கூடாது என்பதை கூட விஜய் சேதுபதி அறிந்து வைத்துள்ளார். ஆனால் பொது சமூகம் அப்படி இருப்பதில்லை என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பேசி வருகிறார்கள்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்