Connect with us

ஒரு தோசை கேட்டதுக்காக படப்பிடிப்பில் அசிங்கமா திட்டிட்டாங்க!.. விஜயகாந்த் அவங்களை எதுவும் கேட்கல.. ஏன் தெரியுமா? உதவியாளர் பகிர்ந்த நிகழ்வு!.

actor vijayakanth

Cinema History

ஒரு தோசை கேட்டதுக்காக படப்பிடிப்பில் அசிங்கமா திட்டிட்டாங்க!.. விஜயகாந்த் அவங்களை எதுவும் கேட்கல.. ஏன் தெரியுமா? உதவியாளர் பகிர்ந்த நிகழ்வு!.

Social Media Bar

Actor Vijayakanth : தமிழ் சினிமா நடிகர்களிலேயே பல நடிகர்கள் கோடிகளில் சம்பாதித்தாலும் கூட விஜயகாந்திற்கு இருக்கும் மக்கள் கூட்டம் அவர்களுக்கு கிடையாது.

ஏனெனில் அவர்களை விட குறைவான சம்பளத்தை பெற்றிருந்தாலும் கூட விஜயகாந்த் அனைவருக்கும் உணவளித்தவர் என்று பெயர் வாங்கியவர் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில் உணவுக்காக மிகவும் கஷ்டப்பட்டார் விஜயகாந்த். அவர் மட்டுமில்லை சத்யராஜ் ரஜினிகாந்த் என அனைவருமே சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த பொழுது முதலில் சாப்பாட்டுக்கு தான் கஷ்டப்பட்டனர்.

Vijayakanth
Vijayakanth

ஆனால் அதில் மற்றவர்கள் அந்த கஷ்டத்தை படக்கூடாது என்று அதற்காக அனைவருக்கும் உணவிட்டவர் விஜயகாந்த் மட்டுமே. விஜயகாந்த் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படங்களில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான உணவு தான் போடுவார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

விஜயகாந்த் செய்த உதவி:

ஆனால் அவரது சக்திக்கு அப்பாற்பட்டு சில விஷயங்களும் அதில் நடக்கத்தான் செய்யும். அப்படியான ஒரு விஷயத்தை விஜயகாந்துடன் பணிபுரிந்த நபர் கூறியிருக்கிறார். ஒரு திரைப்படத்தில் விஜயகாந்துடன் பணிபுரிந்து வந்த அந்த நபர் சாப்பாடு கொடுக்கும் இடத்திற்கு சென்று இரண்டு வடை வாங்கி சாப்பிட்டு இருக்கிறார்.

பிறகு அவருக்கு பசிக்க துவங்கியுள்ளது. உடனே அவர் அங்கிருந்த உணவு சமைப்பவரிடம் ஒரு தோசை வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதனால் கோபம் அடைந்த அந்த சமையலுக்காரர் மிகவும் மோசமாக அந்த நபரை திட்டிவிட்டார்.

vijayakanth1
vijayakanth1

இதை அங்கிருந்து பார்த்துக் கொண்டிருந்த விஜயகாந்த் உடனே அந்த நபரை அழைத்துள்ளார். வாருங்கள் எங்கள் வீட்டிற்கு சென்று சாப்பிடலாம் என்று அவரை அழைத்து சென்று விட்டார். ஏன் அந்த சமையல்காரரை அவர் திட்டவில்லை என கேட்ட பொழுது காலையிலிருந்து அந்த சமையல்காரர் சமைத்துக் கொண்டு இருக்கிறார்.

நாம் அடிக்கடி போய் உணவு கேட்கும் போது அவருக்கும் கோபம வரத்தானே செய்யும் என்று கூறியிருக்கிறார் விஜயகாந்த். எனவே எல்லோரையும் கண்மூடித்தனமாக திட்டுபவர் கிடையாது விஜயகாந்த் என்பது இதன் மூலமாக தெரிகிறது.

To Top