Tamil Cinema News
ராசியில்லாத நடிகர்.. அஜித் படத்தில் இருந்து நீக்கப்பட்ட விக்ரம்..!
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகராக இருந்து வருகிறார். பெரும்பாலும் அஜித் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே நல்ல வசூல் கொடுக்கும் படங்களாகதான் இருந்து வருகின்றன. அதனாலேயே தொடர்ந்து நடிகர் அஜித் அதிக சம்பளம் வாங்கி வருகிறார்.
அஜித் தமிழ் சினிமாவில் நடிக்க வந்த அதே காலகட்டத்தில்தான் நடிகர் விக்ரம், விஜய் மாதிரியான நிறைய நடிகர்கள் தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்து கொண்டிருந்தனர்.
ஆனால் அஜித் ஓரளவு வரவேற்பு பெற்ற பிறகும் கூட நடிகர் விக்ரமிற்கு அவ்வளவாக தமிழ் சினிமாவில் வரவேற்பு என்பது கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் அஜித் நடித்த காதல் கோட்டை திரைப்படம் அப்பொழுது உருவாகிக்கொண்டிருந்தது.
அந்த சமயங்களில் நடிகர் விக்ரம் சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தால் கூட போதும் என்கிற நிலையில்தான் இருந்து வந்தார். எனவே அவர் காதல் கோட்டை திரைப்படத்தில் வரும் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு கேட்டார்.
ஆனால் அப்பொழுது விக்ரம் நடித்த திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை பெறாமல் இருந்தது. இதனால் படத்தின் தயாரிப்பாளர் விக்ரமிற்கு வாய்ப்புகள் கொடுக்க முடியாது அவர் ஒரு ராசியில்லாத நடிகர் என்று கூறிவிட்டார்.
அதனால் மனமுடைந்த விக்ரம் ஒரு சின்ன கதாபாத்திரத்திற்கு கூடவா ராசி பார்ப்பார்கள் என இருந்திருக்கிறார். ஆனால் அப்படிப்பட்ட விக்ரம் இப்பொழுது மிக முக்கியமான ஒரு நடிகராக மாறி இருக்கிறார்.
