Connect with us

தண்ணீர் கூடிக்கிட்டே போகுது.. யாராவது வந்து காப்பாத்துங்க.. ப்ளீஸ்.. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் விஷ்ணு விஷால்!..

vishnu vishal

News

தண்ணீர் கூடிக்கிட்டே போகுது.. யாராவது வந்து காப்பாத்துங்க.. ப்ளீஸ்.. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் விஷ்ணு விஷால்!..

Social Media Bar

Actor Vishnu vishal struck in Chennai flood: சென்னையில் நேற்று டிசம்பர் 04 ஆம் தேதி புயலை ஒட்டி அதி தீவிர கனமழை பெய்தது. பொதுவாகவே சென்னை கனமழைக்கே தாங்காத அளவிற்கு இருக்கும் மாநகரம் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே..

இந்த நிலையில் அதி தீவிர கனமழையால் சென்னையே நேற்று ஸ்தம்பித்துவிட்டது என கூறலாம். இரண்டு நாட்களாக பல இடங்களில் மின்சாரம் இல்லை. பல இடங்களில் அதிக மட்டத்தில் நீர் ஏறியதால் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இதற்கு அரசு சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி அவர்களை கண்டித்து காலை விஷால் வீடியோ வெளியிட்டுருந்தார். இதற்கு நடுவே இன்று மழை நின்ற நிலையில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. ஆனாலும் சென்னையில் ஏரியில் இருந்து வரும் நீரின் காரணமாக பல இடங்களில் நீரின் அளவு அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்த நிலையில் காரப்பாக்கத்தில் உள்ள நடிகர் விஷ்ணு விஷால் உதவி கேட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அவரது வீடு இருக்கும் பகுதியில் அதிகப்படியான நீர் வந்ததால் தற்சமயம் வீட்டின் மாடியில் இருக்கிறார் விஷ்ணு விஷால்.

இங்கு மின்சாரம் இல்லை, போன் சிக்னல் இல்லை சில இடங்களில் கிடைத்த சிக்னலை வைத்து இந்த பதிவை போடுகிறேன் சீக்கிரம் எங்களுக்கு வந்து யாராவது உதவுங்கள் என்று கூறியுள்ளார் விஷ்ணு விஷால். இந்த நிலையில் ரசிகர்கள் இவற்றை ஷேர் செய்து வருகின்றனர்.

To Top