News
எந்த கடவுளும் சட்டங்கள் வகுக்கவில்லை! – சபரிமலை குறித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்!
சபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது குறித்த சர்ச்சைகள் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. பிரபலங்களும் கூட இதற்கு தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் பிரபலங்களில் சமூகம் சார்ந்த சிந்தனை உள்ள நடிகைகளில் முக்கியமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ், இவர் ஏற்கனவே கருப்பு நிற பெண்களை மற்றவர்கள் தாழ்வாக பார்ப்பது, மற்றும் கதாநாயகியாக நடிப்பவர்கள் மற்ற கதாபாத்திரங்களில் நடிக்காதது, குறித்த விழிப்புணர்வு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் ஒரு பேட்டியில் கலந்துக்கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷுடம் சபரி மலையில் இன்னும் பெண்களை உள்ளே விடுவதில்லையே? அதை பற்றி உங்கள் கருத்து என்ன? என கேட்கப்பட்டது. அதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் பதிலளிக்கும்போது “இந்தியாவில் கிராமம், நகரம் என அனைத்து இடங்களிலும் ஆணாதிக்கம் இருக்கிறது. இடத்தை பொறுத்து ஆணாதிக்கம் மாறுவதில்லை.
அதனால் மனிதர்கள் ஆணுக்கு தகுந்தாற் போல விதிமுறைகளை விதிக்கின்றனர். ஆனால் கடவுளுக்கு ஆண், பெண் என்ற வித்தியாசம் எல்லாம் இல்லை. எந்த கடவுளும் இவர்கள் மட்டும்தான் என் கோவிலுக்கு வரவேண்டும் என கூறுவதில்லை. மனிதர்களே அதை செய்கின்றனர்” என கூறியுள்ளார்.
இதையடுத்து பெண்கள் மத்தியில் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு ஆதரவுகள் அதிகரித்து வருகின்றன.
