ஷாருக்கான் நடித்த பதான் எப்படி இருக்கு? – பட விமர்சனம்!

பல சர்ச்சைகளுக்கு பிறகு ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் தற்சமயம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்ற திரைப்படமாகும்.

ப்ரி புக்கிங் செய்ததிலேயே படம் அதிக ரூபாயை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. பாலிவுட்டில் சல்மான்கான், ஹிருத்திக் ரோஷன் போன்ற பிரபல நடிகர்கள் அனைவரும் உளவாளியாக படம் நடித்துள்ளனர்.

அந்த வகையில் ஷாருக்கானும் தற்சமயம் உளவாளியாக களம் இறங்கியிருக்கும் திரைப்படம்தான் பதான். நான்கு வருடங்களுக்கு பிறகு திரையில் வரும் ஷாருக்கானின் திரைப்படமாக பதான் உள்ளது.

வழக்கம் போல வில்லன் ஒரு ப்ளானை போட அதை தடுக்க இந்திய உளவுத்துறையால் அனுப்பப்படும் நபர்தான் பதான். அவருடன் கூட்டாளியாக நடிகை தீபிகா படுகோனே வருகிறார்.

இருவரும் சேர்ந்து கண்டங்களை தாண்டி பல நாடுகளை கடந்து எப்படி வில்லனின் திட்டங்களை முறியடிக்க போகிறார்கள் என்பதாக கதை செல்கிறது. பாலிவுட்டில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வழக்கமான ஷாருக்கான் படங்களை போலவே இந்த படமும் சிறப்பான திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Refresh