Connect with us

இதுக்கு பேசாமல் பாலா படத்துலையே நடிச்சிருக்கலாம்!.. மாரி செல்வராஜால் வேதனைக்குள்ளான நடிகை!.

mari selvaraj divya duraisamy

News

இதுக்கு பேசாமல் பாலா படத்துலையே நடிச்சிருக்கலாம்!.. மாரி செல்வராஜால் வேதனைக்குள்ளான நடிகை!.

Social Media Bar

Director Mari selvaraj: மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் மாரி செல்வராஜ் முக்கியமானவர்.  கர்ணன் திரைப்படத்திற்கு பிறகு மாரி செல்வராஜின் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்க துவங்கியுள்ளது.

முக்கியமாக அவரது திரைப்படங்களை திரையரங்கிற்கு சென்று பார்ப்பதற்கு மக்கள் தயாராக இருக்கின்றனர். தொடர்ந்து சமூகநீதி பேசி வரும் தமிழ் இயக்குனர்களில் மாரி செல்வராஜூம் ஒருவராக இருக்கிறார்.

vaazhai
vaazhai

இளையராஜாவின் வாழ்க்கை வரலாறை படமாக்குவதற்கு திட்டங்கள் நடந்த பொழுது அதில் மாரி செல்வராஜ் அந்த படத்தை இயக்க வேண்டும் என்பதுதான் தனுஷின் ஆசையாக இருந்தது. ஆனால் தற்சமயம் படத்தின் இயக்குனரில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு நடுவே வாழை என்கிற ஒரு திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் அவரது நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவம் என்று கூறப்படுகிறது. வாழை மரத்தை வெட்டுவதற்காக குழந்தை தொழிலாளர்களை ஒரு வண்டியில் அழைத்துச் செல்லும் பொழுது அந்த வண்டியில் ஏற்பட்ட விபத்தை கதைகளமாக கொண்டு படத்தை இயக்கியிருக்கிறார்.

மாரி செல்வராஜிக்கு நடந்த விபத்து:

உண்மையிலேயே சிறுவயதில் அப்படி ஒரு வேலைக்கு சென்ற பொழுது விபத்தில் சிக்கி அதில் மாரி செல்வராஜ் மட்டுமே உயிர் பிழைத்திருக்கிறார் எனவே அவர் அந்த சிறுவர்களை நினைவு கூறும் வகையில் அந்த படத்தை எடுக்கிறார்.

இதில் நடிகை திவ்யா துரைசாமி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் வாழை தார்களை கையில் எடுத்துக்கொண்டு சகதியில் நடப்பது போன்ற காட்சிகள் படத்தில் இருக்கின்றன. இதற்காக பல நாட்கள் 80 கிலோ எடையுள்ள வாழைத்தார்களை அவரிடம் கொடுத்து அவரை சகதியில் நடக்க வைத்திருக்கின்றனர்.

இதனால் படாத பாடுபட்டதாக கூறும் நடிகை திவ்யா துரைசாமி இதற்கு பாலா படத்திலேயே நடித்திருக்கலாம் போல என்று யோசித்து விட்டாராம் அந்த அளவிற்கு மாரி செல்வராஜ் கடுமையாக அவரை வேலை வாங்கியதாக பத்திரிகையாளர் அந்தணன் கூறுகிறார்.

To Top